ராசிபலன்

virgo

கன்னி

இன்றைய பலன்:

அவரச கதியில் செயல்பட்டால் வீண் கஷ்ட நஷ்டங்களைச் சந்திக்க நேரிடும். இன்று சில்லரை விவகாரங்களை நல்லவிதமாகப் பேசி தீர்த்துக்கொள்ளப் பாருங்கள்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்

வாரப் பலன்:

அன்­புள்ள கன்னி ராசிக்­கா­ரர்­களே,

நிழல் கிரகமான ராகுவின் அருள் பெறலாம். குரு வகையில் சில நன்மைகள் உண்டு. புதன், சூரியன், சுக்கிரன், சந்திரன் நற்பலன்களைத் தருவர். செவ்வாய், சனி, கேது பலம் கெடும்.

நினைத்ததைச் சாதிக்கும் வரை ஓயாதவர்கள் என உங்களைக் குறிப்பிடலாம். அடுத்து வரும் நாள்களில் உங்களது உடல்நலம் திருப்திகரமாக இருக்கும். முன்பு நோய்வாய்ப்பட்டவர்கள் மெல்ல குணமடைவர். முன்பு உபாதையுற்ற குடும்பத்தாரும் தற்போது நலம்பெறுவர். இவ்வாரம் உங்களது பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வழக்கமான வருமானம் தடையின்றிக் கிடைப்பதால் செலவுகளை எளிதில் ஈடுகட்டலாம். உங்கள் பரந்த மனதை அறிந்துகொண்டு ஒருசிலர் உங்களிடம் பண உதவி கேட்கலாம். இது விஷயத்தில் கவனமாகச் செயல்படுங்கள். ‘ஆற்றில் போட்டாலும் அளந்து போட வேண்டும்’. இதை மனதிற் வைத்துக் கொண்டு தகுந்த நபர்களுக்கு உதவுங்கள். புதிய சுபப்பேச்சுகளை ஒத்திப்போடுவதில் தவறில்லை. மற்றபடி நீங்கள் ஈடுபடும் காரியங்கள் அனைத்தும் சுணக்கம் இன்றி நல்ல முறையில் நடந்து முடியும். பணியாளர்களின் மதிப்பு, மரியாதை உயரும். வியாபாரத்தில் லாபம் திருப்தி தரும். வார இறுதியில் முக்கிய தகவல் கிட்டும்.

இல்லறச் சக்கரம் வழக்கம்போல் சுழலும். பிள்ளைகள் ஏற்றம் காண்பர்.

அனுகூலமான நாள்கள்: டிசம்பர் 7, 9

அதிர்ஷ்ட எண்கள்: 2, 9