இன்றைய பலன்:
விடாப்பிடியாக இருந்து திட்டமிட்டவற்றைச் சாதிப்பீர்கள். எனவே பாராட்டுகளுக்கும் ஆதாயங்களுக்கும் குறைவிருக்காது. சிறு தடைகளைச் சமாளித்துவிடலாம்.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9
நிறம்: பச்சை, மஞ்சள்
வாரப் பலன்:
அன்புள்ள கும்ப ராசிக்காரர்களே,
மாதக் கோள்களான புதன், சுக்கிரனின் அமைப்புகள் சிறப்பாக உள்ளன. குருவருள் கிட்டும். சனி, ராகு, கேது, சூரியன், சந்திரனால் நலமில்லை. செவ்வாயின் இடமாற்றம் சாதகமாகாது.
இனிமையான பேச்சால் பலரது மனதிலும் இடம் பிடிக்கக் கூடியவர்கள் என உங்களைக் குறிப்பிடலாம். அடுத்து வரும் நாள்களில் உங்கள் மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். தெளிந்த நீரோ டையைப் போன்ற மனநிலையுடன் கச்சிதமாகச் செயல்படுவீர்கள். மனநலனைப் போலவே உடல் நலமும் சிறப்பாக இருக்கும். வருமான நிலை சிறப்பாக இருக்கும். வழக்கமான தொகைகள் பல சீரான இடைவெளிகளில் கைக்கு வந்து சேரும். திட்டமிட்ட வேலைகளில் பல சிறப்பாக நடந்தேறும். திறமைக்கேற்ற ஆதாயங்களும் பல புதிய வாய்ப்புகளும் தேடிவரும். நட்பு மற்றும் உறவு வட்டாரத் தொடர்புகள் சுமுகமாக இருக்கும். மங்கல காரியங்கள் அமோகமாக நடந்தேறும். வழக்குகளில் சாதகமான திருப்பங்களை எதிர்பார்க்கலாம். திட்டமிட்டு மேற்கொள்ளும் பயணங்கள் ஆதாயங்களைத் தரும். பணியாளர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சலுகைகளைப் பெறுவர். செய்தொழிலில் விறுவிறுப்பு அதிகரிக்கும். வார இறுதியில் நல்ல மனிதர்களின் அறிமுகம் கிட்டும். அவர்களுடனான தொடர்புகளை வலுப்படுத்துக் கொள்ளலாம்.
இல்லறம் சிறக்கும். கணவன், மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும்.
அனுகூலமான நாள்கள்: பிப்ரவரி 17, 19
அதிர்ஷ்ட எண்கள்: 4, 7