இன்றைய பலன்:
வெட்டிப் பேர்வழிகளை அடையாளம் கண்டு ஒதுக்கி வைக்கப் பாருங்கள். பெரியவர்கள் துணை நிற்பர். செலவுகள் இருக்கும்.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 9
நிறம்: அரக்கு, நீலம்
வாரப் பலன்:
அன்புள்ள விருச்சிக ராசிக்காரர்களே,
மாதக் கோள்களான சுக்கிரன், புதன் சிறப்பான இடங்களில் சஞ்சரிக்கின்றன. குருவருள் கிட்டும். சந்திரனால் நலமுண்டு. சனி, சூரியன், ராகு, கேது, செவ்வாயின் மங்கலத்தன்மை கெடும்.
எந்நேரமும் இன்முகத்துடன் வலம் வரக்கூடியவர்கள் நீங்கள். இவ்வாரம் உங்களுக்குரிய வரவுகள் சீராக இருக்கும். வழக்கமான வருமானம் தடையின்றிக் கிடைப்பதால் தேவைகளை எளிதில் ஈடுகட்டலாம். மறுபுறும் செலவுகளின் பட்டியல் நீளும். நெருக்கமானவர்கள் உங்களிடம் பொருளுதவி எதிர்பார்க்க வாய்ப்புண்டு. அவர்களுக்கு உதவுவதில் தவறில்லை. என்றாலும் தனக்கு மிஞ்சிதான் தானமும் தர்மமும் என்பதை மனதிற்கொண்டு செயல்படுங்கள். இவ்வாரம் புதுப் பொறுப்புகள் தேடி வரக்கூடும். அவற்றை ஏற்பது குறித்து நிதானம் தேவை. நண்பர்கள் ஒருசிலர் காரியவாதிகளாக நடப்பதைக் கண்டு வருந்த வேண்டாம். மாறாக நீங்களும் ஒதுங்கி நிற்பதே நல்லது. மங்கல காரியங்கள் இனிதே நடந்தேறும். பணியாளர்களின் செல்வாக்கு சொல்வாக்கு உயரும். கூட்டுத் தொழில் புரியும் வியாபாரிகள் கூட்டாளிகளுடன் இணக்கமான போக்கை கடைபிடிப்பது நல்லது. வார இறுதியில் முக்கியத் தகவல் தேடி வரக்கூடும்.
குடும்பத்தில் இயல்புநிலை இருக்கும். உடன்பிறந்தோர் ஆதரவுண்டு.
அனுகூலமான நாள்கள்: நவம்பர் 30, டிசம்பர் 1
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9