ராசிபலன்
கடகம்
இன்றைய பலன்:
சிலர் உங்களுக்கு முட்டுக்கட்டை போடலாம். எனினும் இன்று இறுதி வெற்றி உங்களுக்குத் தான். மாலைக்குள் பொறுப்புகளை நிறைவேற்றுவீர்கள்.
அதிர்ஷ்ட எண்கள்: 4, 9
நிறம்: ஊதா, வெண்மை
வாரப் பலன்:
அன்புள்ள கடக ராசிக்காரர்களே,
இவ்வாரம் புதன், சுக்கிரன் ஆகியோர் நற்பலன்களைத் தருவர். குரு, சனி, ராகு, கேது, சூரியன், செவ்வாய், சந்திரன் ஆகிய அமைப்புகள் சாதகமாக இல்லை.
எப்போதும் அமைதி விரும்பும் நல்ல மனிதர்கள் நீங்கள். தற்போது எல்லாமே சாதகமாக நடக்கும் எனச் சொல்வதற்கில்லை. மனத்தில் சில குழப்பங்கள் ஆக்கிரமித்திருக்கும். எதிலும் முடிவுகளை எடுப்பதில் சற்றே தடுமாறுவீர்கள். எது சரி, எது தவறு எனக் கணக்கிடுவதை நெருக்கமானவர்களின் பொறுப்பில் விட்டுவிடுவது நல்லது. தெய்வ அருளும் தனித்திறமைகளும் துணை நிற்பதால் ஏற்றுக்கொண்ட பொறுப்புகளை எப்பாடுபட்டாவது நிறைவேற்றுவீர்கள். உங்கள் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படாது. உடல்நலத்தில் எந்தப் பாதிப்பும் இருக்காது. குடும்பத்தார் தேவைகளை நிறைவேற்றும் வகையில் தொகைகள் வந்து சேரும். விரயங்கள் குறையும். பயணங்கள், புது முயற்சிகள் எதிர்பார்த்தபடி அமையும். சொத்துகள் வகையில் ஆதாயமுண்டு. வழக்குகள் இழுத்தடிக்கும். பணியாளர்களும் வியாபாரிகளும் ஏற்றம் காண்பர். வார இறுதியில் இனிக்கும் தகவல்கள் கிட்டும்.
குடும்ப விவகாரங்களை வெளியே கசியவிட வேண்டாம்.
அனுகூலமான நாள்கள்: ஆகஸ்ட் 14, 15
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4

