ராசிபலன்
ரிஷபம்
இன்றைய பலன்:
முக்கியமற்ற விவகாரங்கள் குறித்து கவலை வேண்டாம். இன்று நல்லவர்கள் துணை நிற்பர். ஆதாயங்கள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4
நிறம்: நீலம், வெண்மை
வாரப் பலன்:
அன்புள்ள ரிஷப ராசிக்காரர்களே,
இவ்வாரம் சனிபகவானின் அருளைப் பெறுவீர்கள். புதன், சுக்கிரன், சூரியன், சந்திரனின் அமைப்புகள் சிறப்பாக அமையும். ராகு, கேது, செவ்வாய் வலுவிழப்பர். குருவால் நன்மை, தொல்லை இல்லை.
எப்போதும் பொதுநலன் கருதிச் செயல்படும் பண்பாளர்கள் நீங்கள். தற்போது சூழ்நிலை ஓரளவு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். அடுத்து வரும் நாள்களில் எதுகுறித்தும் அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. தடைகளற்ற சூழலில் ஏற்றுக்கொண்ட பொறுப்புகளைக் கச்சிதமாக நிறைவேற்றுவீர்கள். உங்களது செயலாற்றல், வேகம் பளிச்சிடும். உழைப்புக்குரிய ஆதாயங்கள், பாராட்டுகள் மனநிறைவு தரும். இவ்வாரம் வருமானம் போதுமானதாக இருக்கும். அடிப்படைத் தேவைகள் குறைவின்றி நிறைவேறும். குடும்பத்தாரின் சில கோரிக்கைகளுக்கும் செவிசாய்க்கலாம். உடல்நலம் சீராக இருக்கும். பயணங்கள், புது முயற்சிகள் சோடை போகாது. நீண்ட நாள் வழக்குகளில் சாதகப்போக்கு நிலவும். மங்கலப்பேச்சுகள் கைகூடும். சொத்துகள் வகையில் சிலருக்கு ஆதாயம் உண்டு. பணியாளர்களுக்குச் சாதகமான காலமாக அமையும். வியாபாரம் செழிக்கும். வார இறுதியில் தனிப்பட்ட விருப்பங்கள் சில நிறைவேறும் வாய்ப்புண்டு.
இல்லறச் சக்கரம் இனிதே சுழழும். பெற்றோர் ஆதரவுண்டு.
அனுகூலமான நாள்கள்: ஆகஸ்ட் 10, 11
அதிர்ஷ்ட எண்கள்: 4, 8

