ராசிபலன்

aries

மேஷம்

இன்றைய பலன்:

கூடுமானவரை எந்தப் பணியையும் ஒத்திப்போட வேண்டாம். இன்று தொடங்கிய வேகத்தில் பணிகள் மளமளவென நடந்தேறும்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

நிறம்: அரக்கு, பச்சை

வாரப் பலன்:

அன்­புள்ள மேஷ ராசிக்­கா­ரர்­களே,

இவ்வாரம் சந்திரன் உலவும் அமைப்பு சிறப்பாக அமையும். ராகு, புதன், சுக்கிரன், செவ்வாய் நற்பலன்களைத் தருவர். குரு, சனி, கேது, சூரியன் ஆகியோரின் ஆதரவு இல்லை.

எதிலும் நன்கு ஆராய்ந்து நல்ல முடிவுகளை எடுக்கக்கூடியவர்கள் நீங்கள். தற்போது உங்கள் எண்ணம்போல் சில விஷயங்கள் நடந்தேறும் எனில் சிறு பின்னடைவுகளும் இருக்கத்தான் செய்யும்‌. அடுத்து ‌வரும் நாள்களில் உங்கள் திட்டமிட்ட, சுறுசுறுப்பான செயல்பாட்டிற்கு யாராலும் அணைபோட இயலாது. சரியான, கச்சிதமான திட்டங்களுடன் களமிறங்கிப் பல பணிகளை முடித்திடுவீர்கள். எனினும் தடைகளும் இருக்கும்தான். எதிரிகளின் ஆதிக்கமும் அதிகரித்து இருக்கும். உதவிகளை எதிர்பார்க்க வேண்டாம். வருமானம் அதிகரிக்காது என்றாலும் விரயங்கள் கட்டுப்பட்டிருக்கும். வழக்கமான தேவைகள் நிறைவேறும். பயணங்கள், புது முயற்சிகள், சொத்துகள் வகையான முயற்சிகளில் நிதானம் தேவை. உடல்நலம் சற்றே பாதிக்கப்படலாம். வழக்கு, விவகாரங்கள் வழக்கம்போல் இழுத்தடிக்கும். பணியாளர்களும் வியாபாரிகளும் சற்றே அடக்கி வாசிப்பது நல்லது. வார இறுதியில் தடைகள் குறைந்து சாதகமான சூழ்நிலை காணப்படும்.

குடும்பத்தில் இயல்புநிலை இருக்கும். பிள்ளைகள் ஆதரவுண்டு.

அனுகூலமான நாள்கள்: ஆகஸ்ட் 13, 14

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5