ராசிபலன்
மீனம்
இன்றைய பலன்:
நண்பர்கள் துணையோடு சிலவற்றை உருப்படியாகச் செய்து முடிக்க இயலும். இன்று வழக்கத்தைவிட அதிக பணிகளைச் செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7
நிறம்: சிவப்பு, பச்சை
வாரப் பலன்:
அன்புள்ள மீன ராசிக்காரர்களே,
நிழல் கிரகமான கேதுவின் அருளைப் பெறலாம். குரு, புதன், சந்திரன் ஏற்றம் தருவர். சனி, ராகு, சூரியன், சுக்கிரன், செவ்வாய் ஆகிய அமைப்புகள் சாதகமாக இல்லை.
தான, தர்ம காரியங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் என உங்களைக் குறிப்பிடலாம். தற்போது திட்டமிட்ட வேலைகளைச் செய்துமுடிக்க அதிகப்படியாக உழைக்கவேண்டி இருக்கும். தகுந்த செயல்திட்டங்கள் தீவிர முயற்சி இருப்பின் அனைத்தையும் கடந்து முக்கியப் பொறுப்புகளை நிறைவேற்றி நற்பெயரைத் தக்கவைத்துக்கொள்ள இயலும். புது முயற்சிகளில் ஈடுபடுவதும் புதுப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதும் தவறில்லை. எனினும் அதிக முதலீடுகளையும் உங்கள் உழைப்பையும் உறிஞ்சாமல் பார்த்துக்கொள்வது நல்லது. நண்பர்கள் சிலரது ஆதரவு உண்டு. . பொதுவாக உடல்நலம் நன்றாக இருக்கும். ஓடியாடி உழைத்தாலும் சோர்வு தட்டாது. மனநலமும் சிறப்பாகவே இருக்கும். தற்போது பொருளியல் சிறப்பாக இருக்கும். செலவுகள் கட்டுப்பட்டிருக்கும். மங்கல காரியங்கள் தொடர்பான முயற்சிகள் சாதகமாகும். பணியாளர்களும் வியாபாரிகளும் சாதகமான பலன்களைப் பெறுவர். வார இறுதியில் நீண்டநாள் முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். இச்சமயம் முக்கிய தகவல்கள் வந்து சேரும்.
குடும்பத்தில் நிம்மதி இருக்கும். கணவன், மனைவி இடையே அன்பு பெருகும்.
அனுகூலமான நாள்கள்: ஆகஸ்ட் 11, 12
அதிர்ஷ்ட எண்கள்: 2, 9

