ராசிபலன்

sagittarius

தனுசு

இன்றைய பலன்:

யாரையும் குறைத்து எடை போட வேண்டாம். இன்று வெளி வேலைகள் எளிதில் நடந்தேறும். மனக் குழப்பம் ஒன்று முடிவுக்கு வரும்.

அதிர்ஷ்ட எண்கள்: 4, 5

நிறம்: ஊதா, வெண்மை

வாரப் பலன்:

அன்­புள்ள தனுசு ராசிக்­கா­ரர்­களே,

நிழல் கிரகமான ராகுவின் ஆதரவு கிடைத்திடும். புதன், சுக்கிரன் நலம்புரிவர். குரு, சனி, கேது, செவ்வாய், சூரியன், சந்திரனின் அமைப்புகள் சாதகமாக அமையாது.

கடினமான சூழலில் பதட்டமடையாமல் செயல்படுபவர்கள் நீங்கள். தற்போது முக்கியக் கோள்களின் ஆதரவு இல்லை என்றாலும் ஒரேயடியாக முடங்கிவிட மாட்டீர்கள். மாறாக, அடுத்து வரும் நாள்களில் கடினமான பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் எனும் உத்வேகம் மனத்தில் அதிகரிக்கும். மறுபக்கம் தடைகளும் இருக்கும்தான். எனினும் குருவின் அருட்பார்வைகள் பலனாக இறுதியில் வெற்றி உங்கள் வசமாகும். வரவுகள் சுமார் எனில் செலவுகள் வரிசைகட்டி நிற்கும். சேமிப்புகளில் கைவைக்க வேண்டிய நிலை சிலருக்கு ஏற்படலாம். உடல்நலம் லேசாகப் பாதிக்கப்படக்கூடும். தலைவலி, காய்ச்சல் என்று ஏதாவது உடல் கோளாறுகள் தோன்றி மறையும். பயணங்கள் கூடாது. புது முயற்சிகளில் பணத்தை முடக்குவதும் சரியல்ல. சொத்துகள் வகையில் மறைமுக ஆதாயம் உண்டாகும். மங்கலப் பேச்சுகள் மந்தமடையும். பணியாளர்களும் வியாபாரிகளும் சிறு போட்டிகளை எதிர்கொள்வர். வார இறுதியில் அனைவரையும் அரவணைத்துப்போவது நல்லது.

குடும்பத்தில் இயல்புநிலை இருக்கும்.

அனுகூலமான நாள்கள்: ஆகஸ்ட்: 14, 15

அதிர்ஷ்ட எண்கள்: 3, 7