ராசிபலன்
மிதுனம்
இன்றைய பலன்:
விறுவிறுப்பான இந்நாளில் உங்களுடைய முயற்சிகள் எதுவும் சோடை போகாது. ஆதாயங்கள், பாராட்டுகள் மன நிறைவு தரும்.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6
நிறம்: பச்சை, மஞ்சள்
வாரப் பலன்:
அன்புள்ள மிதுன ராசிக்காரர்களே,
மாதக் கோள்களான புதன், சுக்கிரனின் சஞ்சாரங்கள் சிறப்பானவை. குரு, கேது, சந்திரனின் அருள்கிட்டும். சனி, ராகு, சூரியன், செவ்வாய் ஆகியோரின் ஆதரவு கிடைக்கவில்லை.
எத்தகைய சூழலையும் சமாளித்து நடைபோடக் கூடியவர்கள் நீங்கள். இவ்வாரம் உங்கள் வாழ்க்கைப்பயணம் மேடு, பள்ளங்கள் நிறைந்ததாக இருக்கும். வழக்கமான பணிகளைச் செய்து முடிப்பீர்கள். அவற்றில் வழக்கத்தைவிட அதிக தடைகளை எதிர்கொள்வீர்கள். அதிக உழைப்பும் முனைப்பும் இன்றி எதையும் சாதிக்க இயலாது. நட்பு, உறவு வட்டாரங்களில் எதிர்பார்த்த உதவிகள் அமையுமா என்பது சந்தேகம்தான். வருமானம் ஓரளவு சீராக இருக்கும். வழக்கமான தொகைகள் கிட்டும். செலவுகளும் வழக்கம்போல் இருக்கும். உடல்நலம் பொதுவாக நன்றாக இருக்கும். பயணங்கள், புது முயற்சிகளுக்குத் திட்டமிடலாம் என்றாலும் அதிக பணத்தை முடக்க வேண்டாம். சொத்துகள், மங்கல நிகழ்வுகள் வகையில் சிறு செலவுகள் உண்டு. பணியாளர்களும் வியாபாரிகளும் உழைப்புக்குரிய வளர்ச்சி காண்பர். வார இறுதியில் பிரச்சினைகளின் தாக்கம் குறைந்து மனத்தில் தெளிவு பிறக்கும். திடீர்த் தொகைகளும் தேடி வரும்.
குடும்பத்தில் நல்லிணக்கம் இருக்கும். பிள்ளைகள் ஆதரவுண்டு.
அனுகூலமான நாள்கள்: ஆகஸ்ட் 9, 10
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

