ராசிபலன்

leo

சிம்மம்

இன்றைய பலன்:

கடினம் எனக் கருதிய பணிகளும்கூட எளிதில் நடந்தேறும். இன்று எந்த பணியையும் புறக்கணிக்கக் கூடாது. மாலையில் ஓய்வு உண்டு.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 7

நிறம்: பச்சை, அரக்கு

வாரப் பலன்:

அன்­புள்ள சிம்ம ராசிக்­கா­ரர்­களே,

இவ்வாரம் செவ்வாயின் அருள் கிடைத்திடும். சந்திரன், புதன், சுக்கிரன் நலம்புரிவர். சனி, ராகு, சூரியன், கேதுவின் பலம் கெடும். குரு வகையில் நன்மை, தொல்லை இருக்காது.

நற்குணங்களால் அனைவரையும் கவரும் பண்பாளர்கள் நீங்கள். தற்போது கோள்களின் அமைப்பு அவ்வளவு சிறப்பாக இல்லை என்றாலும் கவலைப்பட வேண்டாம். அடுத்துவரும் நாள்களில் குருவின் புண்ணியப் பார்வை உங்கள் வாழ்க்கைப் பயணத்தை ஓரளவு எளிதாக்கும் என நம்பலாம். இவ்வாரம் சில விவகாரங்களில் சாண் ஏறினால் முழம் சறுக்கக்கூடும். திட்டமிட்ட பணிகளில் சரிபாதி எளிதில் முடிவடையும் எனில் சில பணிகள் இழுத்தடிக்கும். தடைகள் அதிகம் என்றாலும் சமாளித்திடலாம். வருமானம் ஏற்ற இறக்கமாக இருக்கும். வழக்கமான தேவைகள் நிறைவேறும். சிறு உடற்கோளாறுகள் தோன்றி மறையக்கூடும் என்பதால் உடல்நலனில் கவனம் தேவை. வீண் முயற்சிகள், தூரப் பயணங்களைத் தவிர்க்கவும். வழக்குகள், மங்கலப் பேச்சுகள் இழுத்தடிக்ககூடும். சொத்துகள் வகையில் விரயங்கள் இருக்கும். பணியாளர்களும் வியாபாரிகளும் சில சவால்களைச் சமாளிக்க வேண்டியிருக்கும். வார இறுதியில் எதிர்பாராத தொகைகள், ஆதாயங்கள் வந்து சேரும் வாய்ப்புண்டு.

வீட்டில் இயல்புநிலை இருக்கும். பிள்ளைகள் ஆதரவுண்டு.

அனுகூலமான நாள்கள்: ஆகஸ்ட் 13, 15

அதிர்ஷ்ட எண்கள்: 4, 9