இன்றைய பலன்:
தேவை இல்லாமல் யாருடனும் மோதத் தேவையில்லை. இன்று தடைகளை மீறி முக்கியப் பணிகளை முடிப்பீர்கள். ஆதாயங்கள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3
நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
வாரப் பலன்:
அன்புள்ள மகர ராசிக்காரர்களே,
மாதக் கோள்களான புதன், சுக்கிரன், சூரியனின் அமைப்புகள் சிறப்பாக உள்ளன. சனி, குரு ஏற்றம் உண்டு. சந்திரனால் நலமுண்டு. செவ்வாய், ராகு, கேது வலுவிழப்பர்.
தன்னைப் போல் பிறரும் வளமாக வாழ வேண்டும் என நினைப்பவர்கள் நீங்கள். இவ்வாரம் பெரும்பாலான கிரகங்களின் அனுக்கிரகம் கிடைத்துள்ளது. அடுத்து வரும் நாள்களில் உங்களுக்குரிய வரவுகள் பிரமாதம் எனச் சொல்லும்படி இருக்கும். வழக்கமான தொகையுடன் எதிர்பாராத ஆதாயங்களும் கிடைத்தால் வாழ்க்கை வசதிகளுக்கு என்ன குறை இருக்க முடியும்? குடும்பத்தாரின் நீண்ட நாள் விருப்பங்களை நிறைவேற்றலாம். பிறருக்கு தேடிச் சென்று உதவும் இயல்பு கொண்ட நீங்கள், நண்பர்களுக்கு பொருளுதரி செய்து மனத்திருப்தி காண்பீர்கள். இவ்வாரம் பணிச்சுமை அதிகம் இருக்காது. வீட்டில் இருந்தபடியே முக்கிய காரியங்களை நல்லபடியாக முடிக்கலாம். உடல்நலம் திருப்திகரமாகவே இருக்கும். உடன்பிறந்தோரின் எதிர்காலம் குறித்த முயற்சிகள் பொருட்டு முக்கிய செலவுகள் ஒருசிலருக்கு ஏற்படலாம். முன்பே நிச்சயிக்கப்பட்ட மங்கள காரியங்கள் நல்லபடியாக நடந்தேறும். பணியாளர்களின் திறமைகள் பளிச்சிடும் நேரமிது. வியாபாரத்தில் லாபம் திருப்தி தரும். வார இறுதியில் திடீர் ஆதாயம் கிடைக்கலாம்.
குடும்பத்தில் சிறு குறையும் இருக்காது. பெற்றோர் ஆதரவுண்டு.
அனுகூலமான நாள்கள்: டிசம்பர் 8, 9
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6