‘காற்பந்து கலாட்டா’: தமிழ் முரசின் கலகலப்பான கலந்துரையாடல்

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி 2026 வலையொளி

‘காற்பந்து கலாட்டா’: தமிழ் முரசின் கலகலப்பான கலந்துரையாடல்

1 mins read
74fc5a6f-301b-4d2e-b255-99eb34ddece1
தமிழ் முரசின் காற்பந்து கலாட்டா’ வலையொளியைத் தொகுத்து வழங்கிய (இடமிருந்து) உதவி ஆசிரியர் கருணாநிதி ஜீவானந்தம், நிர்வாக உதவி ஆசிரியர் நரேந்திரன் பிள்ளை, நிர்வாக உதவி ஆசிரியர் பிரசன்னா கிருஷ்ணன். - படம்: த.கவி
Google News Preferred Icon

உலகெங்கும் உள்ள காற்பந்து ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருந்த உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி 2026 வந்துவிட்டது.

இவ்வாண்டு நடைபெறும் போட்டி அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. முதல் ஆட்டம் சிங்கப்பூர் நேரப்படி வெள்ளிக்கிழமை (ஜூன் 12) அதிகாலை 3 மணிக்குத் தொடங்குகிறது. அதில் மெக்சிகோவும் தென்னாப்பிரிக்காவும் மோதுகின்றன.

இந்நிலையில், உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியைக் கொண்டாடும் வகையிலும் அது பற்றிய பல சுவைமிகு தகவல்களை அள்ளித் தரவும் ‘காற்பந்து கலாட்டா’ என்ற சிறப்பு வலையொளியைத் தமிழ் முரசு வெளியிடுகிறது.

இந்த ஆண்டுக்கான போட்டி பல புதிய பரிமாணங்களுடன் பிரம்மாண்டமாக அரங்கேற இருக்கிறது. நடக்க இருக்கும் போட்டியில் முக்கிய நிகழ்வுகள், விதிமுறை மாற்றங்கள், சர்ச்சைகள், அடுத்த ஆட்டங்களுக்கான கணிப்புகள் ஆகியவை குறித்து ‘காற்பந்து கலாட்டா’ வலையொளித் தொடரில் அலசி ஆராயப்படும்.

போட்டியில் களமிறங்கும் குழுக்கள், ஆட்டங்கள் ஆகியவை குறித்து நிறைய பேசப்படும்.

உலகக் கிண்ணப் போட்டி தொடங்குவதற்கு முன்பு காற்பந்து கலாட்டா தொடரின் முதல் வலையொளி வெளியிடப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் இந்த கிட்டத்தட்ட 39 நாள்களில் காற்பந்து ரசிகர்களுடன் இந்த வலையொளித் தொடரும் பயணம் செய்யும். போட்டியின் தொடக்கம் முதல் இறுதி ஆட்டம் வரை தமிழ் முரசின் ‘காற்பந்து கலாட்டா’ வலையொளித் தொடரைக் கண்டுகளியுங்கள்.

வலையொளியைக் காணும் ரசிகர்களுக்கான போட்டி, காத்திருக்கும் கவர்ச்சிமிகு பரிசுகள் பற்றிய விவரங்கள் அடுத்தடுத்த வலையொளிகளில் தெரிவிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்
உலகக் கிண்ணம்காற்பந்துவலையொளிதமிழ் முரசு