சண்டை நிறுத்தத்துக்குப் பிறகும் தாய்லாந்தின் ஆக்கிரமிப்பு: கம்போடியா

எல்லைப் பகுதிகள் பற்றி விவாதிக்க வேண்டும்:கம்போடியா

சண்டை நிறுத்தத்துக்குப் பிறகும் தாய்லாந்தின் ஆக்கிரமிப்பு: கம்போடியா

1 mins read
“எங்கள் இறையாண்மையை மீறும் செயல்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை,” என்று கம்போடியப் பிரதமர் ஹுன் மனெட் ஊடகத்திடம் கூறினார்.
3bb146f6-702a-41cd-9a2d-caf40ad7688a
தாய்லாந்து, கம்போடிய எல்லையில் இருநாடுகளும் 1962ஆம் ஆண்டு வரை உரிமை கோரிய பிரயெ விஹார் ஆலயம். தாய்லாந்தின் அண்மைய வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு தற்போது கடும் சேதமடைந்து காணப்படுகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்
யுனெஸ்கேவால் கடந்த 2008ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 7ஆம் தேதி உலக மரபுடைமைச் சின்னமாக அடையாளம் காணப்பட்ட பிரயெ விஹார் ஆலயம் 1,722 அடி உயரக் குன்றின் மேல் அமைந்துள்ளது.
யுனெஸ்கேவால் கடந்த 2008ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 7ஆம் தேதி உலக மரபுடைமைச் சின்னமாக அடையாளம் காணப்பட்ட பிரயெ விஹார் ஆலயம் 1,722 அடி உயரக் குன்றின் மேல் அமைந்துள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்
தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் கடந்த ஆண்டு ஜூலை, டிசம்பர் மாதங்களில் இருமுறை நடந்த எல்லைச் சண்டையில் பெரும் பாதிப்புக்குள்ளான பிரயெ விஹார் கோயில். பிப்ரவரி 12ம் தேதி எடுக்கப்பட்டப் படம்.
தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் கடந்த ஆண்டு ஜூலை, டிசம்பர் மாதங்களில் இருமுறை நடந்த எல்லைச் சண்டையில் பெரும் பாதிப்புக்குள்ளான பிரயெ விஹார் கோயில். பிப்ரவரி 12ம் தேதி எடுக்கப்பட்டப் படம். - படம்: ராய்ட்டர்ஸ்
கோயிலின் ஒரு கோபுர தளத்தில் அர்ஜுனருடன் சிவன் மல்யுத்தம் செய்யும் சிற்பம். ஆரம்பத்தில் இந்து சமயம் சார்ந்திருந்த அக்கோயில் பின்னாளில் பௌத்தர்களால் பராமரிக்கப்பட்டது.
கோயிலின் ஒரு கோபுர தளத்தில் அர்ஜுனருடன் சிவன் மல்யுத்தம் செய்யும் சிற்பம். ஆரம்பத்தில் இந்து சமயம் சார்ந்திருந்த அக்கோயில் பின்னாளில் பௌத்தர்களால் பராமரிக்கப்பட்டது. - படம்: விக்கிப்பீடியா

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கடந்த ஆண்டு ஏற்படுத்திய சண்டை நிறுத்தத்திற்குப் பிறகும் கம்போடியாவின் எல்லைப் பகுதிகளைத் தாய்லாந்து ராணுவம் ஆக்கிரமித்துள்ளது என்று கம்போடியப் பிரதமர் ஹுன் மனெட் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 17) குற்றஞ்சாட்டியுள்ளார். பிரச்சினைக்குரிய எல்லைப் பகுதிகள் பற்றி விவாதிக்க இருநாட்டு எல்லை ஆணையத்தை பணியாற்ற அனுமதி வழங்குமாறு கம்போடியப் பிரதமர் தாய்லாந்தைக் கேட்டுக்கொண்டார்.

இவ்வாரம் அமெரிக்கா அமைத்துள்ள அமைதிக் குழுவைச் சந்திக்க வாஷிங்டன் சென்றுள்ள கம்போடியப் பிரதமர் இக்கருத்துகளை ராய்ட்டர்ஸ் ஊடகத்திடம் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 17) தெரிவித்தார்.

மத்திய கிழக்கின் காஸா அமைதிக்காக அமெரிக்காவால் அமைக்கப்பட்ட அமைதிக் குழு, உலகப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண உதவலாம் என்று அதனை விரிவாக்க அதிபர் டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் கம்போடியப் பிரதமர் அக்குழுவைச் சந்திக்கவுள்ளார்.

கம்போடியாவின் குற்றச்சாட்டை தாய்லாந்து மறுத்துள்ளது. சண்டை நிறுத்த உடன்பாட்டின்படியே அதன் ராணுவம் எல்லைப் பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்று தாய்லாந்து வலியுறுத்திவருகிறது.

தாய்லாந்து கம்போடிய சண்டையை தாம் நிறுத்திவைத்துள்ளதாக அதிபர் டிரம்ப் பெருமையாக விளம்பரப்படுத்திவரும் நிலையில் கம்போடியப் பிரதமரின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சண்டை நிறுத்தம் எந்த நேரத்திலும் மீறப்படும் வாய்ப்பையும் இது ஏற்படுத்தியுள்ளது. ஏறத்தாழ 817 கிலோமீட்டர் நீளமுடைய இருநாட்டு எல்லைப் பகுதிகளில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கிய ராணுவத் தாக்குதல்களால் பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்