இயற்கை பேரிடர்களால் $4.4 பில்லியன் இழப்பு: சீனா

இயற்கை பேரிடர்களால் $4.4 பில்லியன் இழப்பு: சீனா

1 mins read
f64877dc-ad4e-44e7-8806-12a95caa1e7b
இவ்வாண்டின் முதல் காலாண்டில் நிகழ்ந்த இயற்கைப் பேரிடர்களில் சிக்கி 79 பேர் உயிரிழந்தனர். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

பெய்ஜிங்: சீனாவில் இவ்வாண்டின் முதல் காலாண்டில் நிகழ்ந்த இயற்கைப் பேரிடர்களால் பொருளியலுக்கு $4.46 பில்லியன் இழப்பு ஏற்பட்டிருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் சனிக்கிழமை (ஏப்ரல் 13) தெரிவித்தது.

பல இடங்களில் ஏற்பட்ட உறைபனி நிலை, சின்ஜியாங்கின் வடமேற்குப் பகுதியில் 7.1 ரிக்டர் அளவில் நிகழ்ந்த நிலநடுக்கம், தென்மேற்கில் யுன்னான் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு, மஞ்சள் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஆகியவற்றை மேற்கோள்காட்டி அந்நாட்டு நெருக்கடிநிலையை நிர்வகிக்கும் அமைச்சு இவ்வாறு தெரிவித்தது.

இந்த இயற்கைப் பேரிடர்களில் சிக்கி 79 பேர் உயிரிழந்ததாகவும் 110,000 பேருக்கு வேறு இடங்களுக்குப் புலம்பெயரும் நிலை ஏற்பட்டதாகவும் அந்நாட்டு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.

மேலும், 26 வட்டாரங்களைச் சேர்ந்த 10.4 பில்லியன் மக்கள் இயற்கைப் பேரிடர்களால் இவ்வாண்டின் முதல் காலாண்டில் பாதிக்கப்பட்டனர் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி, சீனாவின் தென்மேற்குப் பகுதியில் ஏற்பட்ட வறட்சியால் 424,000 ஹெக்டர் பயிர்கள் நாசமானதாகக் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்