மலேசியாவின் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை விபத்தில் லாரி ஓட்டுநர் மரணம்

1 mins read
3cae5df9-f3ac-4bf2-af4b-fb3af0d9163e
நெடுஞ்சாலையின் 266.9 கி.மீ. குறியீட்டில் விபத்து நிகழ்ந்தது. - படம்: தி ஸ்டார்

செரம்பான்: மலேசியாவின் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் ஒரு ஸ்போர்ட்ஸ் யூடிலிட்டி வாகனத்துடன் (SUV) மோதியதில் லாரி ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.

40 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவர் திங்கட்கிழமை (ஜூலை 14) மதியம் 12.50 மணிக்கு விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்ததாக தீயணைப்பு, மீட்புத்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

SUVயில் பயணம் செய்த இரண்டு பயணிகள் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் கூறினார்.

“முன் இருக்கையில் இருந்த ஒரு பெண்ணுக்கு கால் முறிவு ஏற்பட்டது, மற்றொரு பெண் பயணிக்கு கை முறிவு ஏற்பட்டது.

“வாகனத்தை ஓட்டிய ஆடவர் காயமின்றி தப்பினார்,” என்று அவர் கூறினார்.

நெடுஞ்சாலையின் 266.9 கி.மீ. குறியீட்டில் விபத்து நிகழ்ந்தபோது இரு வாகனங்களும் தெற்கு நோக்கிச் சென்றுகொண்டிருந்தன.

குறிப்புச் சொற்கள்
விபத்துலாரிஉயிரிழப்பு