17 வயதுக்குக்கீழ் உள்ளோர் வாழ்நாள் முழுவதும் புகைபிடிக்க தடை: பிரிட்டன்

17 வயதுக்குக்கீழ் உள்ளோர் வாழ்நாள் முழுவதும் புகைபிடிக்க தடை: பிரிட்டன்

1 mins read
0ed7d05e-7b86-4f77-af81-7a629f28f519
2009ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்குப்பின் பிறந்தோருக்குப் புகைபிடிக்கும் பழக்கம் ஏற்படக்கூடாது என்பதைக் கருத்தில்கொண்டு மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. - படம்: பிக்சாபே
Google News Preferred Icon

லண்டன்: பிரிட்டனில் 17 வயதுக்குக்கீழ் உள்ளோர் வாழ்நாள் முழுவதும் இனி புகைபிடிக்க முடியாது. 17 வயதுக்குக்கீழ் உள்ளோரைச் சிகரெட் வாங்க முடியாதபடி தடைசெய்யும் மசோதாவை பிரிட்டி‌ஷ் நாடாளுமன்றம் அங்கீகரித்துள்ளது.

2009ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்குப்பின் பிறந்தோருக்குப் புகைப்பிடிக்கும் பழக்கம் ஏற்படக்கூடாது என்பதைக் கருத்தில்கொண்டு புகையிலை, வேப் மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.

அந்த மசோதா ஏற்றுக்கொள்ளப்பட்டதை வரலாற்று மைல்கல் என்று வருணித்தார் பிரிட்டி‌ஷ் சுகாதார அமைச்சர் வெஸ் ‌ஸ்தீரிடிங்.

அமலுக்குவரும் மசோதாவால் பிரிட்டனில் புகைபிடிக்கும் பழக்கமில்லாத முதல் தலைமுறை உருவாகும் என்றார் அவர்.

அங்கீகரிக்கப்பட்ட மசோதா அரச அங்கீகாரத்தைப் பெற்றபின் சட்டமாக்கப்படும்.

அதையடுத்து பிள்ளைகளின் விளையாட்டு மைதானங்கள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றின் வெளிப்புறங்கள் ஆகியவற்றில் புகைபிடிப்பதைத் தடைசெய்ய அரசாங்கத்துக்கு அதிகாரம் கிடைக்கும்.

மின்சிகரெட்டுகளின் சுவையைக் கட்டுப்படுத்தி புகை்பிடிக்க தடை நீடிக்கும் இடங்களில் மின்சிகரெட்டுகளையும் தடை செய்ய அரசாங்கத்துக்குப் புதிய அதிகாரம் வழங்கப்படும்.

குறிப்புச் சொற்கள்
மின்சிகரெட்தடைபிரிட்டன்வாழ்நாள்