சிட்னி: ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பானீஸ், வெறுப்புப் பேச்சு மற்றும் வன்முறையை ஊக்குவிக்கும் நபர்களுக்கு எதிராக எளிதாகக் குற்றம் சாட்ட உதவும் சட்டத்தை அறிமுகப்படுத்த தனது அரசாங்கம் முயற்சி செய்யும் என்று கூறியுள்ளார்.
அபராதங்கள் அதிகரிக்கப்படுவது, விசாக்களை ரத்து செய்வது அல்லது மறுப்பது எளிதாக்கப்படும். மேலும் வெறுப்புப் பேச்சில் ஈடுபடும் தலைவர்களைக் கொண்ட அமைப்புகளைக் குறிவைப்பதற்கான ஓர் அமைப்பு உருவாக்கப்படும் என்று அவர் கூறினார்.
“ஆஸ்திரேலியர்கள் அதிர்ச்சியடைந்து கோபமாக உள்ளனர். நானும் கோபமாக இருக்கிறேன். இந்தத் தீய கொள்ளையை எதிர்த்துப் போராட நாம் இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டும் என்பது தெளிவாகிறது,” என்று திரு அல்பனீஸ் சீர்திருத்தங்களை அறிவிக்கும் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
திரு அல்பனீஸ் அரசாங்கம் கடந்த இரண்டு ஆண்டுகளாக யூத-விரோதத்தைத், தான் தொடர்ந்து கண்டித்து வந்துள்ளதாகக் கூறியுள்ளது.
வெறுப்புப் பேச்சைக் குற்றமாகக் கருதும் சட்டத்தை அரசாங்கம் இயற்றியது. ஆகஸ்ட் மாதம், சிட்னி மற்றும் மெல்பர்ன் நகரங்களில் இரண்டு யூத-விரோத தீவைப்புத் தாக்குதல்களை டெஹ்ரான் இயக்கியதாகக் குற்றம் சாட்டிய பின்னர், ஈரானியத் தூதரை அது ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேற்றியது.
இருப்பினும், யூத-விரோதச் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலையளிப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, போண்டாய் கடற்கரை துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட ஆகச் சிறிய வயதுடைய மெட்டில்டாவின் இறுதிச் சடங்கு வியாழக்கிழமை (டிசம்பர் 18) நடைபெற்றது.
மெட்டில்டாவின் தாயார் வேலண்டியனா, தந்தை மைக்கேல் உட்பட உறவினர், நண்பர்கள் எனப் பலர் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
துப்பாக்கிச் சூடு நடைபெற்ற அதே சிட்னி நகரில் சிறுமிக்கு இறுதிச் சடங்கு நடைபெற்றது.
டிசம்பர் 14ஆம் தேதி யூதர்கள் ஹனுக்கா விழாவைக் கொண்டாடியபோது துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. சுமார் ஆயிரம் பேர் விழாவுக்கு வந்திருந்தனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டனர்.
துப்பாக்கிக்காரன் சஜித் அக்ரம், 50, காவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டான். அவருடன் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட அவரது 24 வயது மகன் நவீத் அக்ரம் மீது டிசம்பர் 17ஆம் தேதி 59 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இதற்கிடையே மெட்டில்டாவின் தாயார் வேலண்டியனா, சிட்னியில் யூதர்களுக்கு எதிரான தாக்குதல் அதிகரித்து வருவதாக பல ஆண்டுகளாகக் கூறி வருகிறேன். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொருமினார்.

