பேங்காக்: தாய்லாந்து, கம்போடிய இருநாடுகளுக்கு இரண்டாவது வாரமாகத் தொடரும் எல்லைச் சண்டை தீவிரமடைந்து வரும் நிலையில், தாய்லாந்தின் தென்கிழக்கில் உள்ள திராட் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர்14) ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சண்டை கடலோர எல்லைப் பகுதிகளுக்கும் பரவி வருவதையடுத்து கம்போடியா, தாய்லாந்து செல்லும் எல்லையோரப் பாதைகளை மூடியுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் சண்டை நிறுத்தத்தை வலியுறுத்தி இரு நாடுகளும் அதனை ஏற்றுக்கொண்டதாக டிசம்பர் 12 அன்று அறிவித்து இரு நாள்கள் கழித்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சண்டை நிறுத்தத்துக்கு தாங்கள் ஒப்புக்கொண்டதாக அமெரிக்கா கூறுவதை தாய்லாந்து மறுக்கிறது.
அமைதிக்கு தாம் தயாராக இருந்தாலும் கம்போடியா தாக்குதல்களை நிறுத்தவில்லை என்றும் தாம் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகவும் தாய்லாந்தின் ராணுவ உயர் அதிகாரி சுரசான்த் கொங்சிரி கூறினார்.
கம்போடியா ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14) நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 63 வயதான கிராமவாசி ஒருவர் கொல்லப்பட்டதாக தாய்லாந்து அரசாங்கம் தெரிவித்தது.
தாக்குதலில் டிசம்பர் 7ஆம் தேதி இரு தாய்லாந்து வீரர்களை காயமடைந்ததைத் தொடர்ந்து பெரிய அளவில் தாக்குதல் தொடர்வரை இரு நாடுகளும் உறுதிப்படுத்தின.
கடந்த வாரத்தில் நடந்த சண்டையில் எல்லையின் இரு புறங்களிலும் இரண்டு டஜனுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
மே மாதம் தொடங்கிய பூசல் ஜூலை மாதம் ஐந்து நாள் சண்டையாக உருவெடுத்தது.
ஆயிரக்கணக்கான மக்கள் இரு நாடுகளின் எல்லைகளிலிருந்தும் இடம்பெயர நேரிட்டது. அச்சமயம் அமெரிக்காவும் மலேசியாவும் முன்னெடுத்த சமரசப் பேச்சுகளுக்குப் பிறகு அமைதி ஏற்பட்டது.
கடந்த திங்கட்கிழமை மீண்டும் தீவிரமடைந்த ஆயுதத் தாக்குதல் 817 கிலோமீட்டர் நீளமுள்ள எல்லைப் பகுதிகளில் சண்டை தொடங்கியுள்ளது. கிட்டத்தட்ட 800,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
சண்டை நிறுத்தத்தை மீறும் நாடுமீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அரசாங்கப் பேச்சாளர் எச்சரித்துள்ளார்.
இரு தரப்பு தாக்குல்களில் இதுவரை 25பேர் மரணமடைந்துள்ளனர். அவர்களில் 14 தாய்லாந்து ராணுவ வீரர்களும் 11 கம்போடிய பொதுமக்களும் அடங்குவர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருநாடுகளும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் சண்டையைத் தொடங்கியதாகவும் ஒன்றையொன்று குற்றம் சாட்டுகின்றன. தற்காப்புக்காகவே பதில் தாக்குதல் நடத்துவதாகவும் அவை கூறுகின்றன.

