அரசாங்கச் சேவைகளை இணையத் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க கடுமையான சட்டங்களுக்குப் பிரிட்டன் திட்டம்

அரசாங்கச் சேவைகளை இணையத் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க கடுமையான சட்டங்களுக்குப் பிரிட்டன் திட்டம்

1 mins read
c452243a-c78a-4dbb-b7ca-2d091c574b13
பரிந்துரைக்கப்பட்டுள்ள சட்டத்தின்கீழ், தனியார் நிறுவனங்களுக்கும் அரசாங்கத் துறைக்கும் தகவல் தொழில்நுட்பம், தொழில்நுட்ப ஆதரவு, இணையப் பாதுகாப்பு சேவைகளை வழங்கும் நடுத்தர, பெரிய நிறுவனங்களுக்கான விதிமுறைகள் ஒழுங்குபடுத்தப்படும். - படம்: பிக்சாபே
Google News Preferred Icon

லண்டன்: இணையம் மூலம் நடத்தப்படும் தாக்குதல்களிலிருந்து தனது அரசாங்கச் சேவைகளைப் பாதுகாக்க, பிரிட்டன் தனது சட்டங்களைக் கடுமையாக்கத் திட்டமிட்டுள்ளது.

பிரிட்டனின் தேசிய சுகாதாரச் சேவை போன்ற அரசாங்க அமைப்புகளுக்கும் தனியார் துறை நிறுவனங்களுக்கும் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் உயர் பாதுகாப்புத் தரங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் தற்காப்பு அமைச்சின் சம்பளப் பட்டியல் இணையத் தாக்குதல் மூலம் ஊடுருவப்பட்டது.

அண்மையில் நடத்தப்பட்ட இணையத் தாக்குதலில் 11,000க்கும் மேற்பட்ட தேசிய சுகாதாரச் சேவை முன்பதிவுகள், செயல்பாடுகள் ஆகியவை தடைப்பட்டன.

மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர், ஜாக்குவார் லேண்ட் ரோவர் போன்ற பிரபல பிரிட்டிஷ் நிறுவனங்கள் அண்மைய மாதங்களில் இணையத் தாக்குதல்களால் பாதிப்படைந்தன.

இதையடுத்து, இணையத் தாக்குதல்களை எதிர்கொள்ள தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பரிந்துரைக்கப்பட்டுள்ள சட்டத்தின்கீழ், தனியார் நிறுவனங்களுக்கும் அரசாங்கத் துறைக்கும் தகவல் தொழில்நுட்பம், தொழில்நுட்ப ஆதரவு, இணையப் பாதுகாப்பு சேவைகளை வழங்கும் நடுத்தர, பெரிய நிறுவனங்களுக்கான விதிமுறைகள் ஒழுங்குபடுத்தப்படும்.

முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால், பெரிய அளவிலான இணையத் தாக்குதல்கள் ஏற்படும் வேளையில் அது குறித்து அரசாங்கத்திடமும் வாடிக்கையாளர்களிடமும் நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும்.

அத்துடன், இணையத் தாக்குதல் காரணமாக ஏற்படும் பாதிப்புகளைச் சமாளிக்கும் திட்டங்களை நிறுவனங்கள் கொண்டிருக்க வேண்டும்.

குறிப்புச் சொற்கள்