ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: மீட்புப் பணியில் ராணுவம்

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: மீட்புப் பணியில் ராணுவம்

1 mins read
f3ffe969-541e-44a9-967b-39294db88b07
சாலைகள் கடுமையாகச் சேதமடைந்தப் பகுதிகளுக்கு ஹெலிகாப்டரில் மீட்புக்குழுவினர் செல்கின்றனர்.  - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

காபூல்: ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்த நாள்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1,400க்கும் மேற்பட்டோர் மாண்டனர்.

இந்நிலையில், கட்டட இடிபாடுகளில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

புதன்கிழமை (செப்டம்பர் 3) பாதிக்கப்பட்ட இடங்களுக்கு ராணுவ வீரர்களை வான் வழியாக அனுப்பியுள்ளது ஆப்கானிஸ்தான் அரசாங்கம்.

ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் கடந்த திங்கட்கிழமை 6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு செவ்வாய்க்கிழமையும் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதில் குனார், நன்ஹர்ஹர் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள மக்களுக்கு உணவு, மருந்து, தண்ணீர், இருப்பிடம் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

நிலநடுக்கத்தால் சாலைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மக்களைச் சென்றடைவதில் மீட்புக் குழுவினர் தடுமாறி வருகின்றனர்.

சாலைகள் கடுமையாகச் சேதமடைந்தப் பகுதிகளுக்கு ஹெலிகாப்டரில் மீட்புக்குழுவினர் செல்கின்றனர். ஹெலிகாப்டர் தரையிறங்க முடியாத இடங்களில் அதிகாரிகள் வானிலிருந்து குதித்து மக்களைச் சென்றடைகின்றனர்.

நிலநடுக்கத்தால் 3,124 பேர் காயமடைந்தனர். மேலும் 5,400க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்தன.

இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதால் வரும் நாள்களில் மாண்டோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்