அரை இறுதியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி

அரை இறுதியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி

1 mins read
41eaa830-e3ea-456d-9354-f9db599edc74
இந்திய அணிக்கு இது 4வது வெற்றியாக அமைந்தது. - படம்: இந்திய ஊடகம்
Google News Preferred Icon

ராஜ்கிர்: மகளிருக்கான ஆசிய வெற்றியாளர் கிண்ண ஹாக்கி தொடர் பீகார் மாநிலம் ராஜ்கிர் பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது 4வது லீக் ஆட்டத்தில், ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் சென்ற சீனாவை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்திய அணி தரப்பில் சங்கீதா குமாரி 32வது நிமிடத்திலும், சலீமா 37வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். 60வது நிமிடத்தில் தீபிகா, பெனால்டி கார்னரில் கோல் அடித்தார். இந்திய அணிக்கு இது 4வது வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் இந்திய அணி எட்டு புள்ளிகளுடன் அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்