ஜூரோங்கில் வீடுபுகுந்து திருடியதாகச் சந்தேகிக்கப்படும் இளையர் கைது

ஜூரோங்கில் வீடுபுகுந்து திருடியதாகச் சந்தேகிக்கப்படும் இளையர் கைது

1 mins read
647fc818-3fdf-47a5-9ae4-482ece24d4fe
வீட்டின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட இளையர். - படம்: பிக்சாபே
Google News Preferred Icon

வீடுபுகுந்து பணம், சிடிசி பற்றுச்சீட்டுகள் ஆகியவற்றைத் திருடியதாகச் சந்தேகிக்கப்படும் 27 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.

பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து அவர் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.

மே 31ஆம் தேதி, ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 93ல் இருக்கும் குடியிருப்பில் நடந்த அச்சம்பவம் குறித்து தங்களுக்கு அன்றைய தினம் காலை 8 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டதாக ஜூன் 1ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காவல்துறை வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

$193 மதிப்புள்ள பற்றுச்சீட்டுகள், 55 வெள்ளி ரொக்கம், 168 மலேசிய ரிங்கிட் ஆகியவற்றை அந்தச் சந்தேகப்பேர்வழி திருடியதாகக் காவல்துறை கூறியது.

பற்றுச்சீட்டுகளையும் ரொக்கத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

அந்த இளையர்மீது ஜூன் 2ஆம் தேதி குற்றம் சுமத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குற்றத்தை அவர் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் அவருக்கு 10 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்