‘$2மி. மதிப்புள்ள வீவக வீடுகள் குறித்த விளம்பரங்கள் தவறானவை’

‘$2மி. மதிப்புள்ள வீவக வீடுகள் குறித்த விளம்பரங்கள் தவறானவை’

2 mins read
646f6c75-94e5-4cab-a8b1-8b824c294b13
புளோக் 314சி ஆங்கர்வேல் லிங்கில் 2,400 சதுர அடி பரப்பளவு கொண்ட வீடு இருப்பதாகச் செய்யப்பட்ட விளம்பரம் தவறானது என்று அதிகாரிகள் கூறினர். - படம்: கூகல் மேப்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரில் $2 மில்லியன் மதிப்பிலான வீவக வீடுகள் குறித்து வெளியான இரண்டு விளம்பரங்கள் தவறானவை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஒரு விளம்பரத்தில் செங்காங்கில் அருகருகே உள்ள இரண்டு ஐந்தறை வீடுகளை ‘ஜம்போ’ அடுக்குமாடி வீடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றொரு விளம்பரத்தில் தோ பாயோ வட்டார ஐந்தறை வீட்டுக்கு மிக அதிகமான விலை கோரப்படுகிறது.

தேசிய வளர்ச்சி அமைச்சு, வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக), ‘சிஇஏ’ எனப்படும் சொத்து முகவை மன்றம் ஆகியவை மே 8ஆம் தேதி வெளியிட்ட கூட்டறிக்கையில், இவ்விரு வீடுகள் தொடர்பில் சொத்துச் சந்தை முகவர்கள் வெளியிட்ட விளம்பரங்கள் குறித்து மன்றம் அறிந்திருப்பதாகவும் அதுகுறித்து விசாரணை மேற்கொள்வதாகவும் கூறியுள்ளன.

புளோக் 341 ஆங்கர்வேல் லிங்கில், 2,400 சதுர அடி பரப்பளவில் ஆறு படுக்கை அறைகள், நான்கு குளியலறைகளைக் கொண்ட ‘ஜம்போ’ வீடு தொடர்பாக புரோப்பர்டிகுரு இணையத்தளத்தில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இது ‘தவறான தகவல்’ என்று குறிப்பிட்ட அதிகாரிகள் அந்த புளோக்கில் அப்படியொரு வீடே இல்லை என்று கூறினர்.

அருகருகே உள்ள இரண்டு ஐந்தறை வீடுகள் அவ்வாறு விளம்பரம் செய்யப்பட்டிருப்பதாகவும் அவ்வீடுகள் ஒரே வீடாக மாற்றி விற்பதற்குத் தகுதி பெறவில்லை என்றும் கூறப்பட்டது.

மற்றொரு விளம்பரத்தில், ‘த பீக்@தோ பாயோ’வில் உள்ள ஐந்தறை வீடு ஒன்று, $2 மில்லியனுக்கு விற்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டை விற்கத் திட்டமிடுவதாக விற்பனையாளர் பதிவு செய்துகொள்ளவில்லை என்று வீவக கூறியது.

அந்த வீட்டிற்கு $2 மில்லியன் விலை என்பது அந்த வட்டாரத்தில் இதுவரை அதிக விலைக்கு விற்கப்பட்ட வீட்டின் விலையைவிட ஏறத்தாழ அரை மில்லியன் வெள்ளி அதிகம் என்று அது கூறியது.

குறிப்புச் சொற்கள்