சுட்டெரிக்கும் வெயிலுக்கு இடையே சிறப்பாக நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழா

சுட்டெரிக்கும் வெயிலுக்கு இடையே சிறப்பாக நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழா

1 mins read
c1891d4a-1163-40e5-afc6-c5ea53f32fa6
அதிகாலை மூன்று மணியிலிருந்து பால் குடங்களையும் காவடிகளையும் ஏந்திவரும் பக்தர்கள், புனிதமரம் ஶ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயத்தில் நேர்த்திக்கடன்களைச் செலுத்திவருகின்றனர். - படம்: த. கவி
Google News Preferred Icon

புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயத்தின் இந்து சமய விழாவான பங்குனி உத்திரத் திருவிழா புதன்கிழமை (ஏப்ரல் 1) சிறப்பாக நடைபெற்று வருகிறது.

ஆலயத்தைச் சென்றடைவதற்கான முதல் பால் காவடி அருகில் உள்ள கூடாரத்திலிருந்து, அதிகாலை மூன்று மணியளவில் புறப்பட்டது. அதன் பிறகு, பக்தர்கள் பால் காவடிகளையும் அலகுக் காவடிகளையும் ஏந்தி, நேர்த்திக்கடன்களைச் செலுத்தினர்.

ஆலயத்தின் முன்னோடி முயற்சியாக இவ்வாண்டு, பங்குனி உத்திரத் திருவிழா, சமூக ஊடகங்களில் நேரடியாக ஒலிபரப்பப்படுகிறது.

இவ்வாண்டின் பங்குனி உத்திரத் திருவிழா வாரநாளில் அமைந்திருப்பதால், கோயிலுக்கு வர இயலாத பக்தர்களுக்கு அது மிகவும் உதவியாக இருக்கிறது.

சமுதாயக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும் சுகாதார அமைச்சருமான திரு ஓங் யி காங் திருவிழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவரோடு, செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களும் பக்தர்களுடன் பேசினர்.

உள்துறை அமைச்சரும் தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு கா. சண்முகமும் நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களும் விழாவுக்கு வருகை புரிந்திருந்தனர். 

குறிப்புச் சொற்கள்