தங்கக் கட்டிகள், நாணயங்களில் முதலீடு செய்யும் சிங்கப்பூரர்கள் அதிகரிப்பு

தங்கக் கட்டிகள், நாணயங்களில் முதலீடு செய்யும் சிங்கப்பூரர்கள் அதிகரிப்பு

1 mins read
2261c9b3-51da-4d99-9994-cbe673cc7659
சிங்கப்பூரில் தங்கக் கட்டிகள், நாணயங்களுக்கான தேவை 42 விழுக்காடு அதிகரித்துள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரர்கள் பலர் தங்கக் கட்டிகளையும் நாணயங்களையும் இதுவரை இல்லாத அளவில் அதிக அளவில் வாங்குவதாகத் தெரியவந்துள்ளது.

ஈரான் போர் தொடர்பான புவிசார் அரசியல் பதற்றங்களால் தங்க விலை கடுமையாக ஏறி இறங்கும் வேளையில் சிங்கப்பூரர்கள் பலர் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர்.

சிங்கப்பூரில் தங்கக் கட்டிகளுக்கும் நாணயங்களுக்குமான தேவை ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 42 விழுக்காடு அதிகரித்துள்ளது.

இவ்வாண்டின் முதல் காலாண்டில் தங்கக் கட்டிகள், நாணயங்களுக்கான தேவை 3.5 டன்னுக்கு அதிகரித்தது.

மாறாக, தங்க நகைகளின் தேவை ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் கிட்டத்தட்ட 13 விழுக்காடு, அதாவது 1.5 டன்னாகக் குறைந்தது.

கடந்த ஆண்டு தங்கக் கட்டிகள், நாணயங்களுக்கான தேவை 48 விழுக்காடு அதிகரித்தது.

2024ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க, கடந்த ஆண்டு அவற்றுக்கான தேவை 9.6 டன்னுக்கு அதிகரித்தது.

அனைத்துலகத் தங்க மன்றம் புதன்கிழமை (ஏப்ரல் 29) வெளியிட்ட அறிக்கையின்படி, தங்க நகைகளுக்கான தேவை 13 விழுக்காடு குறைந்து 6 டன் ஆனது.

கடந்த ஆண்டின் முடிவில் ஓர் அவுன்ஸ் தங்கத்தின் விலை $4,500 அமெரிக்க டாலராக இருந்தது. இவ்வாண்டு ஜனவரியில் அது $5,589.38 டாலர் என்ற புதிய உச்சத்தைத் தொட்டது.

அமெரிக்க டாலர் வலுவடைந்ததால் பிற நாணயங்களைக் கொண்டு தங்கம் வாங்குவது சிரமமானதால் அதற்கான தேவை சரிந்தது.

குறிப்புச் சொற்கள்
தங்கம்நகைஅதிகரிப்பு