https://www.straitstimes.com/business/invest/how-a-woman-made-her-ex-husband-pay-for-the-lions-share-of-her-medical-bills?ref=top-stories
கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற விவாகரத்து ஒப்பந்தத்தின்படி, தனது முன்னாள் மனைவியின் மருத்துவச் செலவுகளில் 95 விழுக்காட்டை ஏற்கும் பொறுப்பை ஓர் ஆடவர் ஏற்றார். இது அவருக்கு நிச்சயமற்ற நிதிச் சுமையை ஏற்படுத்தியது.
தற்போது 67 வயதாகும் அவர், பணியிலிருந்து ஓய்வு பெற்று மலேசியாவிற்குத் திரும்பியுள்ளார். தனது வருமானம் குறைந்துள்ளதைக் குறிப்பிட்டு, 13 ஆண்டுகளாக வழங்கி வரும் இந்த நிதிப் பொறுப்பிலிருந்து விலக்கு அளிக்கக்கோரி அவர் நீதிமன்றத்தை நாடினார்.
இருவருக்கும் இடையிலான நிதித் தொடர்பைத் துண்டிக்கும் வகையில், மாதந்தர ஜீவனாம்சத்திற்குப் பதிலாக, ஒருமுறை மட்டும் கிட்டத்தட்ட $365,000 வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மலேசியாவில் ஐந்து சொத்துகள், $500,000க்கும் அதிகமான ரொக்க சேமிப்பு என அவரிடம் போதிய நிதி ஆதாரம் இருப்பதை நீதிமன்றம் சுட்டியது.
அத்தொகையைச் செலுத்திய பிறகு, அவர் தமது முன்னாள் மனைவியின் மருத்துவச் செலவுகளை ஏற்கத் தேவையில்லை எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
விவாகரத்து நிபந்தனையின்கீழ், ஒருவேளை பெரிய அளவிலான மருத்துவச் செலவு ஏற்பட்டால், காப்பீடு இல்லாத நிலையில் அவற்றைச் செலுத்துவது அவருக்கு சாத்தியமற்றதாகலாம். நல்லவேளையாக அம்மாது, இதுவரையில் பெரிய மருத்துவச்செலவுக் கோரிக்கைகளை வைக்கவில்லை. எனினும், மாதாந்தரத் தொகை அளிப்பது அவருக்கு நிதிச்சுமையாகவே இருந்தது.
நிறுவன நிர்வாக இயக்குநராக மாதம் $37,000 வருமானம் ஈட்டிய அந்த ஆடவர், 80 விழுக்காடு வெளிநோயாளி சிகிச்சைச் செலவுகளையும், ஏறக்குறைய $4,000 மாதாந்தர பராமரிப்புத் தொகையையும் வழங்கினார். அத்தொகை பின்னர் வெளிநோயாளி சிகிச்சை செலவு, பல் சிகிச்சை, போக்குவரத்துச் செலவுகளையும் சேர்ந்து $5,000 ஆனது.

