துடிப்புடன் மூப்படைதலை விரிவாக்கும் நடவடிக்கைகள்

துடிப்புடன் மூப்படைதலை விரிவாக்கும் நடவடிக்கைகள்

2 mins read
ed98baba-94f6-405d-bed6-3013173f1fa2
‘குட்லைஃப் ஸ்டூடியோ’ தமது இரண்டாவது இல்லம் என்று கூறும் ஓய்வுபெற்ற மைக்கல் தியோ. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

துடிப்புடன் மூப்படைதல் நிலையங்களில் கலைகள் மற்றும் கைத்தொழில்கள், ‘பிங்கோ’ விளையாட்டுகள், உடற்பயிற்சி வகுப்புகள் ஆகியவை பொதுவாக வழங்கப்படுவதுண்டு.

இருப்பினும், சமூக சேவை அமைப்பான ‘மொன்ட்ஃபர்ட் கேர்’ தச்சு வேலை, மின்னிலக்க ஊடகம், நிகழ்கலை போன்ற அம்சங்களில் அதிக விருப்பம் உள்ள மூத்தோரை ஈர்க்க விரும்புகிறது.

அதன் ‘குட்லைஃப் ஸ்டூடியோ’ நிறுவனத்தின் ஒரு பகுதியாக, ஐந்து துடிப்புடன் மூப்படைதல் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. வயது குறைவான, அதிக கல்வியறிவுடைய மூத்தோரை ஈர்க்க, வெவ்வேறு கருப்பொருள்களில் திட்டங்களும் நடவடிக்கைகளும் அவற்றில் வழங்கப்படும்.

இரண்டு ‘குட்லைஃப் ஸ்டூடியோ’ நிலையங்கள் ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளன. மேலும் மூன்றைத் திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆண்களை இலக்காகக் கொண்டு, புக்கிட் பெர்மாயில் தச்சு வேலையில் கவனம் செலுத்தும் நிலையம் 2023ல் திறக்கப்பட்டது.

பிப்ரவரி மாதத்தில், பிடோக்கில் தேநீர் நிலையம் ஒன்று முழுமையாகச் செயல்படத் தொடங்கியது. அங்கு தேநீர் தொடர்பான பயிலரங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன.

‘மொன்ட்ஃபர்ட் கேர்’ ஏப்ரல் 13ஆம் தேதி ‘குட்லைஃப் ஸ்டூடியோ’வை துவங்கியது. முதியோர் பராமரிப்புச் சேவைகளில் உள்ள விதிமுறைகளை மாற்றியமைக்கும் நோக்குடன் அது தொடங்கப்பட்டதாக அதன் நிறுவனர் சாமுவல் இங் கூறினார்.

“இன்று இருக்கும் மூத்தோர் முன்பு இருந்த மூத்தோரைவிட மாறுபட்டவர்கள். அவர்கள் மேலும் துடிப்பாகவும், நடமாடக்கூடியவர்களாகவும் தொலைநோக்குப் பார்வை உள்ளவர்களாகவும் இருக்கின்றனர்.

“மூத்தோர் துடிப்புடன் பங்களிக்க, அவர்களை எவ்வாறு ஈடுபடுத்துகிறோம், அவர்களின் ஆற்றல்களை எவ்வாறு வளர்க்கிறோம் என்பது பற்றியதுதான் ‘குட்லைஃப் ஸ்டூடியோ,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்
மூப்படைதல்சமூக சேவைமுதியோர்உடற்பயிற்சி