பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தப்பட்ட சமயபோதகரைப் பேச அழைத்தவருக்கு அபராதம்

1 mins read
67a4cebb-c8b6-4f4f-8c98-dbec1c8cde6b
லென்டானா தங்குவிடுதியில் உரையாற்றிய சமய போதகர் தீவிரவாதத்தைப் போதித்ததாகக் கூறப்படுகிறது. - படம்: சாவ்பாவ்

முறையான அனுமதியின்றி பொது நிகழ்ச்சி நடத்திய குற்றத்திற்காகத் தங்குவிடுதியொன்றின் நிர்வாக இயக்குநருக்கு $7,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரரான 51 வயது அப்துஸ் சத்தார், பொது ஒழுங்குச் சட்டத்தின்கீழ் ஒரு குற்றச்சாட்டையும் பொதுப் பொழுதுபோக்குச் சட்டத்தின்கீழ் ஒரு குற்றச்சாட்டையும் ஒப்புக்கொண்டார். தீர்ப்பின்போது மூன்றாவது குற்றச்சாட்டும் கருத்தில் கொள்ளப்பட்டது.

பயங்கரவாத அமைப்புடன் தொடர்புள்ளதாகக் கூறப்பட்ட சமய போதகர் அமீர் ஹம்சாவை, சத்தார், துவாஸ் கிரசென்ட்டில் உள்ள லென்டானா லாட்ஜ் எனும் தங்குவிடுதியில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழிபாட்டுக் கூட்டம் நடத்தவும் சமய போதனை செய்யவும் அழைத்திருந்தார். சென்ற ஆண்டு தேசிய தினத்தன்று பங்ளாதே‌ஷைச் சேர்ந்த அமீரை இங்குப் பேச வருமாறு கோரியிருந்தார் சத்தார். அதனை ஏற்றுக்கொண்ட அவர், சென்ற ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி 28 நிமிடத்திற்கு வெளிநாட்டு ஊழியர்களிடையே சமயப் பிரசங்கம் செய்தார். அமீர் தீவிரவாதச் சித்தாந்தத்தைப் பகிர்ந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

பங்ளாதே‌‌ஷ் அரசாங்கம் அமீர் ஹம்சாவைப் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி 2021ஆம் ஆண்டு கைதுசெய்தது.

குறிப்புச் சொற்கள்