கடந்த வாரம் 163 பேர் டெங்கியால் பாதிப்பு

கடந்த வாரம் 163 பேர் டெங்கியால் பாதிப்பு

1 mins read
24a05020-8793-47de-870d-fedc52104a4a
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
Google News Preferred Icon

சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 163 பேர் டெங்கி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசியச் சுற்றுப்புற அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜூன் 4க்கும் ஜூன் 10க்கும் இடைப்பட்ட காலத்தில் அந்த எண்ணிக்கை பதிவானது.

அதற்கு முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 50 விழுக்காடு புதிதாக தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவ்வாரத்தில் 111 பேர் டெங்கியால் பாதிக்கப்பட்டனர்.

தேசியச் சுற்றுப்புற அமைப்பின் இணையதளத்தில் புதன்கிழமை நிலவரப்படி 31 டெங்கி குழுமங்கள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

அவற்றில் 3 சிவப்பு நிறங்களில் உள்ளன. சிவப்பு நிறத்தில் உள்ள குழுமங்களில் 10 அல்லது அதற்கு அதிகமான டெங்கிச் சம்பவங்கள் பாதிவானதைக் குறிக்கிறது.

டெங்கித்தொற்று ஏடிஸ் கொசுக்கள் மூலம் பரவுகிறது. அவை நீர் தேங்கியுள்ள இடங்களில் இனப்பெருக்கம் செய்கின்றன.

இவ்வாண்டில் இதுவரை 3,595 பேர் டெங்கியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொசுக்கள் இனப்பெருக்கம் செய்வதைத் தடுக்க நீர் தேங்காமல் வீட்டை தூய்மமையாக வைத்துக்கொள்ளுமாறு பொதுமக்களிடம் அமைப்பு கேட்டுக்கொண்டது.

குறிப்புச் சொற்கள்
டெங்கிகொசுகாய்ச்சல்