சிங்கைத் தமிழ் இலக்கியச்சுடர் நூல் வெளியீடு

சிங்கைத் தமிழ் இலக்கியச்சுடர் நூல் வெளியீடு

2 mins read
956e5a40-f95c-44d0-bf1b-599fdaab0f71
சிங்கைத் தமிழ் இலக்கியச்சுடர் நூல். - படம்: சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்

இணைப் பேராசிரியர் முனைவர் ஆ. ரா. சிவகுமாரன் எழுதிய ‘சிங்கைத் தமிழ் இலக்கியச்சுடர்’ கட்டுரை நூல் வெளியீடு காண இருக்கிறது.

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் ஏற்பாட்டிலும் தேசிய நூலக வாரியத்தின் ஆதரவிலும் சிங்கப்பூர் உயிர்மெய் பதிப்பகம் வழங்கும் இந்நூல் வெளியீட்டு விழா, ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 22) மாலை 5 மணிக்கு தேசிய நூலகக் கட்டடத்தின் ஐந்தாம் தளத்திலுள்ள இமேஜினேஷன் அறையில் நடைபெறும்.

சிங்கப்பூரின் 60ஆம் ஆண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்நூல் வெளியிடப்படுகிறது.

டாக்டர் சுப. திண்ணப்பன் தலைமையில், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் சு. முத்துமாணிக்கம் வரவேற்புரையும், டாக்டர் சீதாலட்சுமி வாழ்த்துரையும், டாக்டர் அ. வீரமணி நூலாய்வும் செய்யவுள்ளனர். ஏற்புரை நூலாசிரியர் டாக்டர் ஆ. ரா. சிவகுமாரன்.

டாக்டர் சித்ரா சங்கரன் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார். இந்நூலில் சிங்கப்பூர் குடியரசாவதற்கு முன்னரும், ஆன பின்னரும் தமிழ்க் கவிதை இலக்கியம் எவ்வாறு இருந்தது, குழந்தை இலக்கிய வளர்ச்சியில் வானொலியின் பங்கு ஆகியவை இடம்பெற்றுள்ளன.

முன்னோடி இலக்கியமான முனாஜாத்து திரட்டு, வழிநடைச் சிந்து, தமிழ் வளர்ச்சிக்கு கோ. சாரங்கபாணியின் பங்கு, பாத்தென்றல் முருகடியானின் திண்ணப்பர் பிள்ளைத் தமிழ், கவிஞர் நா. பழநிவேலு கவிதை நாடகங்கள், கவிவாணர் ஐ. உலகநாதனின் மூட்டைப்பூச்சி முகாரி, கவிதைவேள் பெருமானின் கட்டைவிரல் கவிதை நாடகம், கவிஞர் பரணின் உள்ளத்தொலி, பாத்தேறல் இளமாறனின் குழந்தைப் பாடல்கள், பாத்தென்றல் முருகதாசனின் இறையுணர்வுப் பாடல்கள் போன்ற அரிய கட்டுரைகளின் தொகுப்பாகவும் ‘சிங்கைத் தமிழ் இலக்கியச்சுடர்’ அமைந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்