மாணவர்கள் பார்வையில் ‘ஒரு துளி சந்தோஷம்’

மாணவர்கள் பார்வையில் ‘ஒரு துளி சந்தோஷம்’

2 mins read
47fe6ade-4acb-401c-b8dc-40eeacbeb749
(இடமிருந்து) சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் சு.முத்துமாணிக்கம், ராஃபிள்ஸ் பெண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவிகள், திருவாட்டி சித்ரா ரமேஷ், ஆசிரியர் கும்பலிங்கம் உத்தமன். - படம்: சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்
Google News Preferred Icon

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் 140ஆவது கதைக்களம் நிகழ்ச்சி பிப்ரவரி 1ஆம் தேதி தேசிய நூலகத்தில் ‘இமேஜினேஷன்’ நடைபெற்றது.

உள்ளூர்ப் படைப்புகளைப் பற்றிய கலந்துரையாடல் அங்கத்தில், எழுத்தாளர் சித்ரா ரமேஷின் ‘ஒரு துளி சந்தோஷம்’ நூலைப் பற்றி ராஃபிள்ஸ் பெண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் தீக்‌ஷிதா செந்தில், தர்ஷிதா செல்வராஜு, காயத்ரி சுரேஷ் ஹரிசுகரிதா ஆகியோர் கருத்துரைத்தனர்.

இந்நூலின் அறிமுகத்தை திருவாட்டி அன்னபூரணி கார்த்திகேயன் வழங்க, கலந்துரையாடலில் பிரம்மகுமார் பாலகிருஷ்ணன் பங்கேற்றார்.

மேலும், கதைக்களத்திற்கு வந்திருந்த போட்டிப் படைப்புகளைப்பற்றிய கலந்துரையாடலும் வெற்றியாளர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன. கழகத்தின் இளையர் பிரிவு உறுப்பினர் செல்வி சௌமியா திருமேனி இந்நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்.

மார்ச் மாதப் போட்டிகள்

நூல் அறிமுகப் போட்டிக்கு, சிங்கப்பூர்த் தேசிய நூலகத்திலுள்ள சிறுகதை, குறுநாவல் அல்லது நாவல் ஒன்றுக்கு 140 சொற்களுக்குள் நயம்பட அறிமுகத்தை எழுதி அனுப்ப வேண்டும். சிறந்த நான்கு நூலறிமுகங்களுக்கு ரொக்கப் பரிசு உண்டு.

சிறுகதைப் போட்டிக்கான தொடக்கவரிகள்

உயர்நிலைப் பள்ளி மாணவர் பிரிவு: 200-300 சொற்களுக்குள் எழுத வேண்டும்.

‘அன்று எடுத்த முடிவால் வாழ்க்கை பாதையே மாறிவிடும் என அவள்/அவன் நினைக்கவே இல்லை.’

இளையர் பிரிவு: 300-400 சொற்களுக்குள் எழுத வேண்டும்.

‘உண்மையான மனிதர்களையும் செயற்கை மனிதர்களையும் இனம் கண்டுகொள்ள முடியாமல் குழம்பித் தவித்தேன்.’

பொதுப்பிரிவு: 400-500 சொற்களுக்குள் எழுத வேண்டும்.

‘நினைவிலிருந்து விலகியிருந்த முகங்கள் யாவும் ஒரேயொரு புகைப்படத்தால் ஒன்றன்பின் ஒன்றாக என்னை நெருங்கின.’

படைப்புகளைக் கணினியில் அச்சிட்டு https://forms.gle/VdpmyEfdVas5wtMLA என்ற மின்படிவத்தின் வழியாக 20.02.2026 வெள்ளிக்கிழமைக்குள் அனுப்ப வேண்டும்.

மேல்விவரங்களுக்கு: https://www.singaporetamilwriters.com/16, மணிமாலா மதியழகன் - 8725 8701, பிரேமா மகாலிங்கம் - 9169 6996.

குறிப்புச் சொற்கள்