தமிழக முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்குச் செல்லவில்லை: அமைச்சர் கீர்த்தனா

தமிழக முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்குச் செல்லவில்லை: அமைச்சர் கீர்த்தனா

1 mins read
6dc03ce2-f01f-4f60-ab5f-edf7acf31c78
அமைச்சர் கீர்த்தனா. - படம்: இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

சென்னை: தமிழகத்துக்கான தொழில் முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படுவது உண்மையன்று என்று தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.

பல முதலீடுகள் ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்குச் சென்றுவிட்டதாகக் கூறுவதை ஏற்க இயலாது என்றும் கடந்த 40 நாள்களுக்குள் தமிழகத்தில் இருந்து எந்த முதலீடும் வெளியேறவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 25 முதலீட்டுத் திட்டங்கள் தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்குச் சென்றுவிட்டதாகக் அமைச்சர் கீர்த்தனா, அவற்றின் மொத்த முதலீட்டு மதிப்பு ரூ.3.3 லட்சம் கோடி என்றார்.

ஏறக்குறைய இரண்டு லட்சம் வேலைவாய்ப்புகளைத் தமிழக இளையர்கள் இழந்துவிட்டனர் என்றும் தமிழகத்தில் இருந்து வெளியேறிய முதலீடுகளால் ஏழு மாநிலங்கள் பயனடைந்தன என்றும் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் குறிப்பிட்டார்.

“தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, போகிற போக்கில் இத்தகைய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அது உண்மையன்று என்பதை நிரூபிக்கவே அரசு சார்பாக விளக்கம் அளிக்கப்படுகிறது.

“கடந்த 2024ஆம் ஆண்டில் மட்டும் எத்தனை திட்டங்கள் பிற மாநிலங்களுக்குச் சென்றதால் தமிழகம் இழந்துள்ளது என்பதைப் புள்ளிவிவரங்கள் தெளிவாகக் காட்டுகின்றன.

“ஆனால், ஆட்சியமைத்து 40 நாள்களில் ஆந்திரப் பிரதேசத்துக்கு முதலீடுகளை அனுப்பிவிட்டதாக எங்களைக் குற்றம்சாட்டுகின்றனர்,” என்றார் அமைச்சர் கீர்த்தனா.

மேலும், 2024ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வரவேண்டிய முதலீடுகள் குஜராத், மகாராஷ்டிரா, ஒடிசா ஆகிய மாநிலங்களுக்குச் சென்றுவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், அது தொடர்பான பட்டியலையும் வாசித்தார்.

குறிப்புச் சொற்கள்
தவெகதமிழகம்முதலீடுஆந்திராமாநிலம்திமுகஉதயநிதி