கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் ஜூலை 3 வரை நீட்டிப்பு

கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் ஜூலை 3 வரை நீட்டிப்பு

1 mins read
a650859a-1866-4224-b4d0-a57327f266db
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை ஜூலை 3ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது விசாரணை நீதிமன்றம். - கோப்புப்படம்: ஊடகம்
Google News Preferred Icon

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றக் காவலை, விசாரணை நீதிமன்றம் ஜூலை 3ஆம் தேதி நீட்டித்துள்ளது.

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு மூலம் கள்ளப் பணப் பரிவர்த்தனை முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், தன்னைக் கைது செய்தது சட்டவிரோதம் என்று உத்தரவிட வேண்டும் எனக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது தேர்தல் பிரசாரத்திற்காக ஜூன் 1ஆம் தேதி வரை கெஜ்ரிவாலுக்கு இடைக்கால பிணை வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் கடந்த 2ஆம் தேதி மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவரது நீதிமன்றக் காவல் ஜூன் 19ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் விசாரணை நீதிமன்றம் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை ஜூலை 3ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்