இந்தியாவின் அதிவேக மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி

இந்தியாவின் அதிவேக மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி

1 mins read
2ff3b4c5-998f-440b-a0e1-7cd1954ee2f9
மெட்ரோ ரயிலில் சென்ற பிரதமர் மோடி, சக பயணிகளுடன் உரையாடியதாக இந்து தமிழ் திசை ஊடகச் செய்தி தெரிவிக்கிறது. - படம்: தி இந்து

புதுடெல்லி: இந்தியாவின் அதிவேக மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இந்தியத் தலைநகர் டெல்லி - மீரட் இடையே 82 கிலோமீட்டர் தூரத்துக்கு இந்த ரயில் இயக்கப்படும். இதன் மூலம் டெல்லியில் இருந்து மீரட் நகரை ஒரு மணி நேர பயணத்தில் சென்றடையலாம். இந்த ரயிலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 160 கிலோமீட்டராகும்.

தொடக்க விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஷதாப்தி நகர் முதல் மீரட் தெற்குப் பகுதி வரை ரயிலில் சென்றார். அவருடன் பயணம் செய்த அதிகாரிகள் நமோ பாரத் ரயில் திட்டம் குறித்து விரிவான விளக்கம் அளித்ததாகவும் அப்போது சக பயணிகளுடன் பிரதமர் மோடி உரையாடியதாகவும் இந்து தமிழ் திசை ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மெட்ரோ ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டின் அதிவேக மெட்ரோ ரயில் சேவையை மீரட் மெட்ரோ நிறுவனம் வழங்குகிறது.

இதன் மெட்ரோ ரயில்கள் ஆக அதிகமாக மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகின்றன.

குறிப்புச் சொற்கள்