இந்தியாவைத் தாக்கத் திட்டமிட்டதாக நம்பப்படும் அனைத்துலகக் கும்பல் கைது

கைதான உக்ரேன், அமெரிக்க நாட்டவர்கள் ட்ரோன் பயிற்சி அளித்ததாக நம்பப்படுகிறது

இந்தியாவைத் தாக்கத் திட்டமிட்டதாக நம்பப்படும் அனைத்துலகக் கும்பல் கைது

1 mins read
754121dc-54fb-432f-bcfe-f0f5ebb219d7
இந்தியாவைத் தாக்கத் திட்டமிட்டதாக நம்பப்படும் ஆறு உக்ரேன் நாட்டவர்கள், ஓர் அமெரிக்கர் அடங்கிய குழுவை இந்தியப் புலனாய்வுத் துறையினர் கைதுசெய்துள்ளனர். - படம்: இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

லக்னோ: இந்தியாவிற்கு எதிராகத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாக நம்பப்படும் அனைத்துலகப் பயங்கரவாதக் குழுவினரை மத்திய புலனாய்வுக் குழுக்கள் கைதுசெய்துள்ளன.

பிடிபட்​ட​வர்​களில் அறுவர் உக்​ரேனைச் சேர்ந்​தவர்​கள், ஒரு​வர் அமெரிக்​கர். இவர்கள் மியன்மர் கிளர்ச்சியாளர்களுக்கு ராணுவ ஆளில்லா வானூர்தி (ட்ரோன்) தொழில்நுட்பப் பயிற்சி அளித்துள்ளதாகவும் நம்பப்படுகிறது.

டெல்லி, லக்னோ, கொல்​கத்தா ஆகிய நகரங்​களில் கைது செய்​யப்​பட்​ட எழுவரும் தற்போது 11 நாள்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று என்ஐஏ அதி​காரி​கள் கூறினர்.

புலனாய்வுத் தகவல்களின்படி, இவர்கள் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் இருந்து சுற்றுலா விசாவில் இந்தியா வந்து, உரிய அனுமதியின்றி மிசோரம் வழியாக மியன்மர் எல்லைக்குள் நுழைந்துள்ளனர்.

அங்கு கிளர்ச்சியாளர்களுக்கு நவீன ராணுவ ட்ரோன்களை இயக்குவது குறித்துப் பயிற்சி அளித்ததுடன், ஐரோப்பாவிலிருந்து ட்ரோன்களை இந்தியா வழியாக மியன்மருக்குக் கடத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. லக்னோ ஹோட்டல் உரிமையாளர் அளித்த தகவல் இவர்களைக் கண்டறிய முக்கியப் பங்காற்றியுள்ளது.

கைது செய்​யப்​பட்​ட​வர்​கள் மீது சட்​ட​விரோத நடவடிக்​கைகள் தடுப்​புச் சட்​டத்​தின் 18வது பிரி​வின் கீழ் வழக்​குப் பதிவு செய்யப்பட்​டுள்​ளது. இவர்​களுக்​குப் பின்​னால் இருக்​கும் வெளிநாட்​டுச் சக்​தி​கள் குறித்து தீவிர வி​சா​ரணை நடத்​தப்​பட்டு வரு​கிறது என்று என்​ஐஏ அதி​காரி​கள்​ கூறினர்​.

குறிப்புச் சொற்கள்
இந்தியாபாதுகாப்புஅமெரிக்காஉக்ரேன்பயங்கரவாதம்தாக்குதல்கைதுபுலனாய்வு