முட்டை லாரி கவிழ்ந்து அடுத்தடுத்து விபத்து; ஐவர் பலி

1 mins read
d562d595-0fd1-48ed-a1cf-29e9eb6c13c1
முட்டை லாரி சாய்ந்ததால் பலர் பலி. - படம்: ஊடகம்

அமராவதி: ஆந்திர பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில் ஓங்கோல் நகருக்கு அருகே, கொப்பொலு பகுதியருகே முட்டைகளை ஏற்றிகொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. கிம்ஸ் மருத்துவமனை அருகே சென்றபோது, லாரி திடீரென சாலையில் கவிழ்ந்தது.

இதில் 2 பேர் பலியானார்கள். லாரி கவிழ்ந்ததும் அந்த வழியே வந்த கார் ஒன்று நடுவழியில் நின்றது. அந்த காரின் பின்னால் வந்த லாரி நின்று கொண்டிருந்த காரின் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது.

இந்த விபத்தில், கார் முற்றிலும் உருக்குலைந்தது. காரில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கார் குண்டூரில் இருந்து திருப்பதி நோக்கி சென்றபோது விபத்து ஏற்பட்டு உள்ளது.

அதில் பயணித்தவர்கள் பாவனி, சந்திரசேகர் மற்றும் வெங்கடேஸ்வரலு என அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

அடுத்தடுத்து நடந்த விபத்துகளால் மொத்தம் 5 பேர் பலியானார்கள். 4 பேர் காயமடைந்தனர். அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்குரிய நிலையில் உள்ளது.

குறிப்புச் சொற்கள்