கர்நாடக முன்னாள் அமைச்சருக்கு ஏழு ஆண்டுகள் சிறை

சட்டவிரோத சுரங்க வழக்கில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கர்நாடக முன்னாள் அமைச்சருக்கு ஏழு ஆண்டுகள் சிறை

1 mins read
689a8bc7-1227-45ef-8ac9-e99a8f8ae412
முன்னாள் அமைச்சர் கலி ஜனார்த்தன் ரெட்டியைச் சிறைக்கு அழைத்துச் செல்லும் காவலர்கள். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

ஆந்திரா: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம், பாஜகவைச் சேர்ந்த கர்நாடக முன்னாள் அமைச்சர் கலி ஜனார்த்தன் ரெட்டிக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

ஓபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் பாஜகவை சேர்ந்த கர்நாடக முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான ஜனார்த்தன் ரெட்டி, அவரது மைத்துனர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி, அப்போதைய சுரங்கங்கள் மற்றும் புவியியல் உதவி இயக்குநர் வி.டி. ராஜகோபால், ஜனார்த்தன் ரெட்டியின் தனி உதவியாளர் மஹ்ஃபுஸ் அலி கான் ஆகியோர் குற்றவாளிகள் என்று சிறப்பு சிபிஐ நீதிமன்றம் புதன்கிழமையன்று (மே 7) தீர்ப்பளித்தது.

கர்நாடகா-ஆந்திரப் பிரதேச எல்லையில் உள்ள பெல்லாரி ரிசர்வ் வனப்பகுதியில் 2007 முதல் 2009 வரை ஓஎம்சி நிறுவனத்தின் சட்டவிரோத சுரங்கத் தொழிலால் மாநில கருவூலத்திற்கு ரூ.884 கோடி இழப்பு ஏற்பட்டதாக அரசுத் தரப்பு குற்றம் சாட்டியது.

இந்த வழக்கில் சிபிஐ, 2011ல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த நிலையில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு கிடைத்துள்ளது.

அதன்படி நீதிமன்றம் அவர்களுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா ரூ.10,000 அபராதமும் விதித்தது. ஜனார்த்தன் ரெட்டி இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.

மேலும், அந்த நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. தீர்ப்பு வெளியான உடன் நால்வரையும் காவலில் எடுத்தது.

இந்த வழக்கில் ஏற்கெனவே கைதான முன்னாள் அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டியும் முன்னாள் அதிகாரி பி. கிருபானந்தமும் விடுவிக்கப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்