சனிக்கிழமை டெல்லி முதல்வராக பதவி ஏற்கிறார் அதிஷி

சனிக்கிழமை டெல்லி முதல்வராக பதவி ஏற்கிறார் அதிஷி

1 mins read
d5ac43a8-ce56-4f78-9ab0-e59ad22c03f0
டெல்லியின் முதல்வராக அதிஷி வரும் செப்டம்பர் 21ஆம் தேதி பதவியேற்பார் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

புதுடெல்லி: டெல்லியின் முதல்வராக அதிஷி வரும் செப்டம்பர் 21ஆம் தேதி பதவியேற்பார் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

முன்னதாக செப்டம்பர் 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கும் சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் அதிஷி முதல்வராக பதவியேற்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதிஷியுடன் அவரது அமைச்சரவைக் குழுவும் பதவி ஏற்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

முந்தைய கெஜ்ரிவால் அரசில் அமைச்சர்களாக இருந்த கோபால் ராய், கைலாஷ் கேலாட், சவுரப் பரத்வாஜ் , இம்ரான் ஹுசைன் ஆகியோர் அமைச்சர் பதவியில் தொடர்வார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் கட்சியின் இரண்டு எம்எல்ஏக்கள் புதிய அமைச்சரவையில் இடம்பெறலாம் என்றும் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்