பாட்டி வாங்கித் தந்த நகைகள்

பாட்டி வாங்கித் தந்த நகைகள்

1 mins read
a16076b9-8845-4b98-8050-2ddf164804a8
பார்வதி நாயர். - படம்: பார்வதி நாயர்
Google News Preferred Icon

தனது சிறு வயதில் இருந்தே ஒவ்வோர் ஆண்டும் தனக்குத் தங்கம் வாங்கிக்கொடுப்பதை தனது பாட்டி சரோஜினி வழக்கமாக வைத்திருப்பதாகக் கூறுகிறார் நடிகை பார்வதி நாயர்.

“புது வடிவமைப்பில் நகைகள் அறிமுகமானால் போதும். உடனே அதை வாங்கிவிட வேண்டும் எனப் பாட்டி நினைப்பார். எங்கள் சொந்த ஊர் கேரளா.

“அட்சய திருதியை நாளில் நகைகள் வாங்குவது தமிழகத்தில் உள்ள பழக்கம் என்றாலும் அம்மா அதை உறுதியாகக் கடைப்பிடிப்பார். குறைந்தபட்சம் பழைய தங்க நகையைக் கொடுத்துவிட்டு புதிதாக வாங்குவார்.

“எனக்கு மிகவும் பிடித்த நகைகளை எல்லாம் பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்கிறேன். காதணி, வளையல், சங்கிலி, மோதிரம் என என்னிடம் ஏராளமான, அழகான நகைகள் உள்ளன. அவை அனைத்தும் என் பாட்டி வாங்கித் தந்தவை,” என்கிறார் பார்வதி நாயர்.

குறிப்புச் சொற்கள்