சாதிக்க உதவும் கால நிர்வாகம், விருப்பம், உழைப்பு

சாதிக்க உதவும் கால நிர்வாகம், விருப்பம், உழைப்பு

1 mins read
a7ed28cc-3abc-4945-bfe7-09dd632a680c
ரித்திக் பாண்டியன் - படம்: ரித்திக்
Google News Preferred Icon

முழு நேர தரவு அறிவியல் பல்கலைக்கழக மாணவனாக இருக்கும் நான் பகுதி நேரமாக உள்ளடக்கம் உருவாக்கும் பணியைச் செய்கிறேன். அத்துடன் வேறு பல பகுதி நேர வேலைகளும் செய்கிறேன்.

படிப்பில் கவனம் செலுத்துவதுடன் பல வேலைகளிலும் ஈடுபடுவது, சிறிது கடினமாக இருந்தாலும் இந்த வேலைகளை  நான் விரும்பிச் செய்வதால் அது எனக்குச் சுமையாக இருப்பதில்லை.

தினமும் படிப்பு, காணொளிக்கான உள்ளடக்கத்தை எழுதுவது, பகுதி நேர வேலைகள் செய்வது என்று நேரமே இல்லாமல் இருந்தாலும், என் குடும்பம் எனக்கு பக்கபலமாக இருக்கிறது. எது செய்வதாக இருந்தாலும் சீரான கால நிர்வாகம் முக்கியம் என்று நம்புகிறேன்.

காணொளி படப்பிடிப்பிற்கு ஒருநாள், காணொளி எடிட்டிங் செய்வதற்கு ஒருநாள், பல்கலைக்கழக வேலைகள் செய்வதற்கான  நேரம் என்று அட்டவணை போட்டுக்கொள்ளவதால், குறைவான நேரத்தில் என்னால் பல வேலைகளைச் செய்து முடிக்க முடிகிறது.

உள்ளடக்கம் எழுதுவதுடன், உடற்பயிற்சிக்கும் புதிய விஷயங்களையும் கற்றுகொள்ளவும் கால அட்டவணையில் நேரம் ஒதுக்குவேன். தற்பொழுது  மாண்டரின் மொழி கற்றுகொள்கிறேன். சிறுவயதிலிருந்து நான் என் வாழ்க்கையை மேம்படுத்துவது எப்படி என்று கற்றுகொண்டு அதற்கேற்ற பணிகளை செய்து வருகிறேன்.

இளையர்கள், அரிதான நேரத்தைச் சரியாக பயன்படுத்தி விருப்பங்களையும் இலக்குகளை நோக்கி செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

குறிப்புச் சொற்கள்