அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் யூடியூப் சேவைத் தடங்கல்

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் யூடியூப் சேவைத் தடங்கல்

1 mins read
9668c6bf-0c3d-4e7f-bee9-c9a4d041acf7
அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் யூடியூப் தளம் செயலிழந்துள்ளதாக டவுன்டிடெக்டர்.காம் என்ற தளம் தெரிவித்துள்ளது. - படம்: டவுன்டிடெக்டர்.காம்

அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் புதன்கிழமை (பிப்ரவரி 18) யூடியூப் தளம் செயலிழந்துள்ளதாக டவுன்டிடெக்டர்.காம் (Downdetector.com) என்ற தளம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் 320,000க்கும் அதிகமானோர் யூடியூப் சமூக ஊடகத் தளத்தைப் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதாக ராய்ட்டர் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

அமெரிக்காவில் உள்ள யூடியூப் தொலைக்காட்சியில் சேவைத் தடங்கல் ஏற்பட்டதாக 8,923 புகார்களும் கூகலில் அந்தத் தளத்தைப் பயன்படுத்த முடியவில்லை என்று 2,694 புகார்களும் பதிவானதாக அமெரிக்காவில் உள்ள டவுன்டிடெக்டர் தளம் சொன்னது.

சிங்கப்பூரில் காலை 9.20 நிலவரப்படி யூடியூப் தளத்தில் சேவைத் தடங்கள் ஏற்பட்டது குறித்து 2,900க்கும் அதிகமான புகார்கள் பதிவானது.

ஆஸ்திரேலியாவில் யூடியூப் சேவைத் தடங்கள் குறித்த புகார்கள் உள்ளூர் நேரப்படி 9.14 மணியளவில் உச்சத்தை எட்டியது. ஏறக்குறைய 11,872 பேர் சேவைத் தடங்கள் குறித்து புகார் அளித்தனர். இருப்பினும் 9.44 மணியளவில் புகார்களின் எண்ணிக்கை 8,692 குறைந்தது.

இந்தியாவிலும் யூடியூப் சேவைத் தடங்கலைப் பயனீட்டாளர்கள் எதிர்கொண்டனர். அதுபற்றி காலை 9.50 மணியளவில் 19,250 புகார்கள் பதிவாகின. சிங்கப்பூர் நேரப்படி காலை 8.50 மணியளவிலிருந்து புகார்கள் வரத் தொடங்கியதை டவுன்டிடெக்டர் தளம் காட்டியது.

தனது சமூக ஊடகத் தளம் ஓரளவு மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளதாக சொன்ன யூடியூப், சேவைத் தடங்கலுக்கான காரணத்தை ஆராய்வதாகக் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்