டிக்டாக் காணொளியைப் பார்த்து முட்டை சமைத்த பெண்ணுக்கு நடந்த விபரீதம்

டிக்டாக் காணொளியைப் பார்த்து முட்டை சமைத்த பெண்ணுக்கு நடந்த விபரீதம்

1 mins read
20a8ba84-9bb8-4839-a2c8-e59a9df88ac9
படம்: டுவிட்டர் -
Google News Preferred Icon

டிக்டாக்கில் பிரபலமாகி வரும் ஒரு காணொளியைக் கண்ட பெண் ஒருவர் அதை செய்து பார்க்க எண்ணி விபரீதத்தில் சிக்கினார்.

‌‌‌ஷாபியா ப‌ஷீர் என்ற 37 வயது பெண்மணி, நுண்ணலை அடுப்பு (Microwave Oven) மூலம் முட்டைகளை வேகவைக்க முயன்றார்.

பாத்திரம் முழுக்க கொதிக்கும் தண்ணீரை வைத்துக்கொண்டு அதில் சில முட்டைகளை வைத்து நுண்ணலை அடுப்புக்குள் சில நிமிடங்கள் வைத்தார்.

பின்னர், முட்டையை எடுத்து ஓடுகளை உடைத்த பெண்ணின் முகத்தில் முட்டை வெடித்தது. அதனால் அவரது முகத்தில் தீக்காயம் ஏற்பட்டது.

தாம் வலியால் துடிப்பதால் அக்காணொளியை யாரும் பின்பற்ற வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

கிட்டத்தட்ட 12 மணி நேரம் காயத்தால் அவதிப்பட்ட நிலையில், நல்ல வேலையாக முகத்தில் எந்த காயத் தழும்பும் ஏற்படவில்லை என்றார் ‌‌‌ஷாபியா.

முட்டை வெடித்ததால் பாதிக்கப்பட்டுள்ள அவர், இனி முட்டையே சாப்பிட மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
காயம்டிக்டாக்