வெலென்சியா வெள்ளம்: ஓராண்டுக்கு முன்பு சேற்றில் புதையுண்டவரின் சடலம் மீட்பு

வெலென்சியா வெள்ளம்: ஓராண்டுக்கு முன்பு சேற்றில் புதையுண்டவரின் சடலம் மீட்பு

1 mins read
efd76924-a3a3-409c-870f-70cbb99d72a2
2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ஆம் தேதியன்று ஸ்பெயினின் வெலென்சியா நகரின் புறநகர்ப் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஏறத்தாழ 240 பேர் மாண்டனர். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

மட்ரிட்: ஓராண்டுக்கு முன்பு ஸ்பெயினின் வெலென்சியா நகரின் புறநகர்ப் பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ஆம் தேதியன்று ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஏறத்தாழ 240 பேர் மாண்டனர்.

அதில் அடித்துச் செல்லப்பட்ட 56 வயது ஆடவரின் உடல் இவ்வாண்டு அக்டோபர் 21ஆம் தேதியன்று சேற்றில் புதையுண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக ஸ்பானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாயமான மூவரில் அந்த ஆடவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நிலத்தைத் தோண்டும் பணிகள் நடந்துகொண்டிருந்தபோது அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அவரது உடல் மீட்கப்பட்ட இடம், அவர் காணாமல் போன இடத்திலிருந்து கிட்டத்தட்ட 40 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளம் ஏற்பட்டு, பல கட்டடங்கள் மூழ்கிய, பிறகே வெலென்சியாவின் மாநில அரசாங்கத்திடமிருந்து அதுகுறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக அதிருப்திக் குரல்கள் எழுந்தன.

குறிப்புச் சொற்கள்