வெள்ளை மாளிகை வளாகத்தில் வித்தியாசமான போட்டி

வெள்ளை மாளிகை வளாகத்தில் வித்தியாசமான போட்டி

2 mins read
7d8b8e54-8d02-465e-82ce-9471e2e1dda3
வெள்ளைமாளிகை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள உயரமான அரங்கம். - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: அதிபர் டிரம்ப் நிர்வாகம், வெள்ளை மாளிகை வளாகத்தில் வித்தியாசமான சண்டைக்கு ஏற்பாடு செய்துள்ளது.

வரும் ஜூன் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இந்தப் போட்டிக்காக தெற்குப் புல்வெளியில் பிரம்மாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ‘யுஎஃப்சி’ எனப்படும் 14 அல்டிமேட் சாம்பியன்ஷிப் போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர்.

ஈரான்மீதான அமெரிக்காவின் போரால் சாதாரண அமெரிக்கர்களின் வாழ்க்கைச் செலவுகள் கூடியுள்ள இவ்வேளையில், 60 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் (சிங்கப்பூர் வெள்ளி 77 மில்லியன்) நடத்தப்படும் இந்தப் போட்டி தேவையில்லாத ஒன்று என்று விமர்சகர்கள் சாடியுள்ளனர்.

ஆனால், அமெரிக்காவின் 250வது பிறந்தநாளைக் கொண்டாடவும் தனது 80வது பிறந்த நாளைக் கொண்டாடவும் இது ஒரு சிறந்த வழி என்கிறார் அதிபர் டிரம்ப்.

இதற்கான செலவுகளை யுஎஃப்சி ஏற்றுக்கொண்டதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செல்வந்தரான அதிபர் டிரம்ப், வெறும் கைகளால் சண்டை போடும் இந்த விளையாட்டை மிகவும் விரும்புகிறார்.

வன்முறை நிறைந்த அந்த விளையாட்டின் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள அவர், இதற்கு முன்னர் நடந்த பல சண்டைகளிலும் பங்கேற்றுள்ளார் தனது சொந்த அரசியல் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றிய அந்த விளையாட்டின் இளம் ரசிகர் பட்டாளத்தின் நன்மதிப்பையும் பெற்றுள்ளார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோவும் யுஎஃப்சி தலைவர் டானா ஒயிட்டுடன் பங்காளித்துவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபோது இந்நிகழ்வைப் பாராட்டினார்.

“இது ஒரு அமெரிக்க மக்களுக்கு வழங்கப்படும் பரிசு,” என்று திரு ரூபியோ கூறினார்.

உலகம் முழுவதும் பில்லியன்கணக்கான மக்கள் இவ்விளையாட்டை ரசிப்பார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
வெள்ளை மாளிகைபோட்டிவிளையாட்டுடோனல்ட் டிரம்ப்