ஈரான் தாக்குதல்களைச் சமாளிக்கும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகள்

ஈரான் தாக்குதல்களைச் சமாளிக்கும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகள்

1 mins read
வான் பாதுகாப்பு கட்டமைப்பு செயல்படும்போது எச்சரிக்கை ஒலி பெரிதாக இருக்கும்
4af56226-7a56-4b93-9e16-63e2f38311b1
தொழிற்பேட்டைகளை நோக்கி வந்த ஏவுகணைகளையும் ஆளில்லா வானூர்திகளையும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் வான் பாதுகாப்பு கட்டமைப்பு வானத்திலேயே அழித்தது. - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

துபாய்: அமெரிக்காவின் நட்பு நாடாக விளங்கும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகள்மீது ஈரான் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.  இந்நிலையில் ஐக்கிய அரபு சிற்றரசுகளின் அலுமினியம் தொழிற்பேட்டைகளைக் குறிவைத்து ஈரான் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.  தொழிற்பேட்டைகளை நோக்கி வந்த ஏவுகணைகளையும் ஆளில்லா வானூர்திகளையும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் வான் பாதுகாப்பு கட்டமைப்பு வானத்திலேயே அழித்ததாக ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 5) அறிக்கை வெளியிட்டது.  வான் பாதுகாப்பு கட்டமைப்பு தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும் என்றும் அது தெரிவித்தது. நாட்டை நோக்கி வரும் ஏவுகணைகளை அழிப்பதற்காக வான் பாதுகாப்பு கட்டமைப்பு செயல்படும்போது எச்சரிக்கை ஒலி பெரிதாக இருக்கும் என்று ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் தற்காப்பு அமைச்சு நினைவூட்டியது.  ஈரானைத் தாக்கும் அமெரிக்க நடவடிக்கைக்கு மத்திய கிழக்கு நாடுகள் தங்களது ராணுவத் தளங்களைக் கொடுத்து உதவுவதாக டெஹ்ரான் குற்றஞ்சாட்டுகிறது. இதனை மத்திய கிழக்கு நாடுகள் மறுத்துள்ளன.  அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ஈரானைத் தாக்கின.  இதற்குப் பதிலடி தரும் விதமாக ஈரான் குவைத், கத்தார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளைத் தாக்கி வருகிறது. இதனால் அந்த வட்டாரமே போரில் சிக்கியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
ஈரான்ஐக்கிய அரபு சிற்றரசுகள்துபாய்