காஸாவில் கிட்டத்தட்ட 400,000 பேர் வீடுகளை இழந்தனர்: ஐநா

காஸாவில் கிட்டத்தட்ட 400,000 பேர் வீடுகளை இழந்தனர்: ஐநா

1 mins read
c03254e3-e626-416e-a7d9-d04d4aa701f0
இஸ்‌ரேலியத் தாக்குதல்களைத் தொடர்ந்து காஸா பகுதியைக் கடும்புகை சூழ்ந்துள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

ஜெனிவா: காஸா பகுதியில் 400,000க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளிலிருந்து தப்பி ஓடிவிட்டதாக ஐக்கிய நாட்டு நிறுவன மனிதநேய அலுவலகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் பதிலடி தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து 23 உதவி ஊழியர்கள் கொல்லப்பட்டதாகவும் அது கூறியது.

காஸாவிலும் மேற்குக் கரையிலும் கிட்டத்தட்ட 1.3 மில்லியன் பேருக்கு உதவ, அந்த அமைப்பு ஏறக்குறைய $294 மில்லியன் நிதிதிரட்டு முயற்சியைத் தொடங்கியது. அந்தத் தொகையில் கிட்டத்தட்ட பாதி, உணவுப் பொருள்களுக்காக ஒதுக்கப்பட்டது.

“அதிகமானோர் வீடுகளிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேறும் நிலைமை தொடர்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் தங்கள் வீடுகளிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டோரின் எண்ணிக்கை 25 விழுக்காடு கூடி, இப்போது 423,000ஐத் தாண்டிவிட்டது,” என்று அந்த அலுவலகம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்