ஒரு மாத நோன்புக்குப் பிறகு முஸ்லிம் மக்கள் நோன்புப் பெருநாளைக் கொண்டாடி வருகின்றனர்.
விண்வெளியில் இருந்தாலும் தமது நோன்புப்பெருநாள் வாழ்த்துகள் அனைவரையும் சென்று சேர வேண்டும் என்ற எண்ணத்தில் அனைத்துலக விண்வெளி நிலையத்தில் இருந்து நோன்புப்பெருநாள் வாழ்த்தைக் காணொளியாக அனுப்பியுள்ளார் ஐக்கிய அரபு சிற்றரசுகளின் விண்வெளி வீரர் சுல்தான் அல் நெயாடி.
காணொளியில் ஐக்கிய அரபு சிற்றரசுகளின் விண்வெளி நிலையத்தின் உருவச்சின்னமான சுஹைலும் இடம்பிடித்திருந்தது.
அரபு மொழியில் பேசும் அவர், தான் இருக்கும் இடத்தையும் சுற்றிக்காட்டினார்.
விண்வெளி நிலையத்தில் இருந்து வந்த காணொளி பார்க்க அழகாகவும் இருந்தது. சமூக ஊடகத்திலும் அந்தக் காணொளி அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

