ஆசியான் மாநாட்டில் கலந்துகொள்ள டிரம்ப்புக்கு அழைப்பு

ஆசியான் மாநாட்டில் கலந்துகொள்ள டிரம்ப்புக்கு அழைப்பு

1 mins read
மலேசியப் பிரதமர் அன்வார் தகவல்
4568c6f4-5ad2-4282-aba0-44f077cd0063
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ (இடம்), ஜூலை 10ஆம் தேதி, கோலாலம்பூரில் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமைச் சந்தித்தார். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், வரும் அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்ள அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்குத் தாம் அழைப்பு விடுத்திருப்பதாகக் கூறியுள்ளார்.

அதிகாரபூர்வமாகத் தாம் அழைப்பு அனுப்பியிருப்பதாக வியாழக்கிழமை (ஜூலை 10), திரு அன்வார் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆசியானின் தலைமைத்துவத்தை ஏற்றுள்ள மலேசியா அக்டோபரில் அந்த மாநாட்டை ஏற்று நடத்தவுள்ளது.

ஆசியான் உச்சநிலை மாநாட்டின்போது கிழக்காசிய உச்சநிலை மாநாடும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
மலேசியாபிரதமர்அன்வார் இப்ராகிம்அமெரிக்காஅதிபர்டோனல்ட் டிரம்ப்அழைப்புராய்ட்டர்ஸ்