ஸ்பெயினில் வெள்ள நிவாரண முயற்சிகள்: கைகொடுக்கும் குடிமக்கள்

ஸ்பெயினில் வெள்ள நிவாரண முயற்சிகள்: கைகொடுக்கும் குடிமக்கள்

1 mins read
397b969d-304b-4a2b-a3c4-07c568deaab0
வெலென்சியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்குக் கால்நடையாகச் செல்லும் தொண்டூழியர்கள். - படம்: இபிஏ
Google News Preferred Icon

மட்ரிட்: ஸ்பெயினில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் படுமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள வெலென்[Ϟ]சி[Ϟ]யாவில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள ஆயிரக்கணக்கான ஸ்பானியர்கள் வாரயிறுதியில் அங்கு சென்றனர்.

ராணுவம், காவல்துறை, குடிமைப் பாதுகாவல் அதி[Ϟ]காரிகள் உயிர்பிழைத்தோரைத் தேடுவதிலும் இடிபாடுகளை அப்புறப்படுத்துவதிலும் கவனம் செலுத்திவரும் வேளையில், குடிமக்கள் அவர்களின் முயற்சிகளுக்குக் கைகொடுத்தனர். வெலென்சியாவையும் அதன் சுற்றுப்பகுதிகளையும் மீண்டும் கட்டியெழுப்புவதில் அவர்கள் உறுதியாக உள்ளனர்.

ஸ்பெயினின் கிழக்குக் கடலோர மாநிலமான நகர்ப்புற வெலென்சியாவுக்கு சனிக்கிழமை (நவம்பர் 2) டிராக்டர்கள் அணிவகுத்துச் சென்றன.

பிரதான சாலைகள் வாகனங்களுக்கு மூடப்பட்டுள்ள நிலையில், பலரும் துடைப்பங்கள், வாளிகளைத் தூக்கிக்கொண்டு கால்நடையாகச் செல்வதை ஸ்பானிய ஊடகங்கள் ஒளிபரப்பிய காணொளிகள் காட்டின.

நகர்ப்புற வெலென்சியாவின் பிரசித்திபெற்ற காற்பந்துக் குழு அதன் விளையாட்டரங்கை அவசரகால நிலையமாகப் பயன்படுத்த அனுமதித்தது. குடிமக்கள் அங்கு உணவு, துணிமணிகள், தண்ணீர் போத்தல்களை வைத்துச்செல்கின்றனர்.

இடம்பெயர்ந்த குடும்பங்களுக்குப் படுக்கைகள், செல்லப்பிராணிகளுக்குப் புகலிடம் வழங்கிய தொண்டூழியர்கள், தளவாட நிர்வாகம் முதல் சமையல் வரை தங்கள் நிபுணத்துவத் திறன்களையும் பகிர்ந்துள்ளனர்.

ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை எட்டு மணி நேரத்திலேயே கொட்டித் தீர்த்ததால் வெலென்சியாவின் சில பகுதிகள் வெள்ளக்காடாக மாறின.

குறிப்புச் சொற்கள்
வெள்ளம்ஸ்பெயின்உதவி