நீருக்குள் வாகனம்; 2 நாள்களுக்குப் பின் பெண் மீட்பு

நீருக்குள் வாகனம்; 2 நாள்களுக்குப் பின் பெண் மீட்பு

1 mins read
61a81ad5-5d39-489e-8c5c-bd689548fda8
படம்: MARION COUNTY SHERIFF OFFICE -
Google News Preferred Icon

அமெரிக்காவில் இரண்டு நாள்களாகக் காணமற்போயிருந்த பெண் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் டெக்சஸ் மாநிலத்தின் மேரியன் கவுன்டி பகுதியில் நேர்ந்தது.

'லேக் ஓ தி பைன்ஸ்' எனும் ஏரியில் நிகழ்ந்த சம்பவம் குறித்து இம்மாதம் ஏழாம் தேதியன்று தங்களுக்கு அழைப்பு வந்ததென மேரியன் கவுன்டி காவல்துறை பிரிவு ஃபேஸ்புக்கில் தெரிவித்திருந்தது. 'ஜீப்' வாகனம் ஒன்று நீரில் மூழ்கியதைக் கண்டதாக ஒரு மீனவர் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தார்.

காணாமற்போன பெண் வாகனத்தில் இருந்தார். சிகிச்சைக்காக அவர் உள்ளூரில் இருக்கும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்